Ticker

6/recent/ticker-posts

எல்மினா விபத்து 46 ஆண்டுகளில் பீச்கிராஃப்ட் (Beechcraft) சம்பந்தப்பட்ட ஐந்தாவது சம்பவம்


பீச்கிராஃப்ட் மாடல் 390 (பிரீமியர் 1) நேற்று சிலாங்கூர், ஷா ஆலமில் உள்ள பண்டார் எல்மினா அருகே விபத்துக்குள்ளான சம்பவம், மலேசியாவில் 46 ஆண்டுகளில் இந்த வகை விமானங்கள் சம்பந்தப்பட்ட ஐந்தாவது சம்பவமாகும். 
Jet Valet Sdn Bhd இயக்கிய இலகு ரக விமானம் பிற்பகல் 2.50 மணியளவில் விபத்துக்குள்ளானதில் ஒரு அதிகாரி உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 6 பயணிகளும், 2 விமான ஊழியர்களும், அந்த வழியாகச் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு வாகன ஓட்டியும் உயிரிழந்தனர்.

லங்காவி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 2.08 மணிக்குப் புறப்பட்ட விமானம் சுபாங்கில் உள்ள சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.

ஜூலை 29, 1977: சிங்கப்பூரில் உள்ள செலெடார் விமானத் தளத்திலிருந்து இரண்டு பேருடன் புறப்பட்ட பீச்கிராஃப்ட் 19 விமானம் ஜொகூர் வான்வெளியில் மாயமானது.

பிப்ரவரி 17, 1999: நெகிரி செம்பிலான், சிரம்பான் மற்றும் தம்பின் இடையே ஒற்றை என்ஜின் கொண்ட இரண்டு இருக்கைகள் கொண்ட பீச்கிராஃப்ட் BE-36 இலகு ரக விமானம், பதிவு எண் VHTXY.

பிப்ரவரி 19, 1999: நெகிரி செம்பிலானில் உள்ள புக்கிட் பெண்டாவின் சரிவில் பிற்பகல் 12.55 மணியளவில் மேஜர் சையத் இஸ்லாம் ஷா அஜாம் இயக்கிய RMAF நூரி ஹெலிகாப்டர் மூலம் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

டிசம்பர் 21, 2016: ராயல் மலேசிய விமானப் படைக்கு (RMAF) சொந்தமான பீச்கிராஃப்ட் கிங் ஏர்  200T விமானம் பினாங்கு பட்டர்வொர்த்தில் உள்ள RMAF தளத்தில் பயிற்சியின்போது விபத்துக்குள்ளானதில் விமானி கொல்லப்பட்டார் மற்றும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

நவம்பர் 22, 2020: பீச்கிராஃப்ட் போனான்சா  F35 இலகு ரக விமானம் ஒன்று, ஜொகூர், குலாய் அருகே உள்ள செடெனாக்கில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் KM 47.8 இல் என்ஜின் கோளாறால் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

SOURCE:malaysiaindru


 



Post a Comment

0 Comments