Ticker

6/recent/ticker-posts

7 குழந்தைகளை ஏன் கொன்றார் செவிலியர் லூசி? - வெளியான பகீர் தகவல்கள்!


இங்கிலாந்தில் பெண் செவிலியர் ஒருவர் தான் பணிபுரிந்த மருத்துவமனையில் 7 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்ததாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

 
இந்த வழக்கில் பல கோணங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாடி வருகின்றனர்.

பிளேயிங் காட் லூசி…

ஆங்கிலத்தில் பிளேயிங் காட் (Playing God) என்றால் எல்லா விசயத்திலும், முடிவெடுக்கிற, எதையும் குறுக்கீடு செய்கிற கடவுளைப் போன்ற அதிகாரம் தனக்கிருப்பதாக ஒருவர் நினைத்துக் கொள்வது. அந்த மனநிலையில் லூசி லெட்பி இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு விடுமுறைக்குப் பிறகு பணிக்கு லூசி திரும்பிய பிறகு நீதிமன்றத்தில் ‘O’ குறிப்பிடப்பட்டுள்ள இரட்டையர்களில் ஒரு குழந்தை உயிரிழந்திருக்கிறது. அடுத்த நாள் இரட்டையரில் மீதம் இருந்து குழந்தை உயிரிழந்திருக்கிறது. அப்போது லூசி Playing God என்று சொல்லப்படும் கடவுள் மனநிலையில் இருந்துள்ளார். அதனால் தான் நிலைமை கையை மீறிப் போயிருக்கிறது என்கிற வாதம் முன்வைக்கப்பட்டது.

கொடூரத்தை ரசிக்கும் வக்கிர புத்தி கொண்டவரா லூசி?

மற்றவர்களின் வேதனையை பார்த்து ரசிக்கும் ஒரு விதமான வக்கிர புத்தியும் சிலருக்கு இருக்கிறது. மூன்றாம் முறையாக கடந்த 2020 ஆம் ஆண்டு லூசி கைது செய்யப்பட்ட போது, அவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தியிருக்கிறார்கள். அப்போது லூசியின் கையழுத்தில் எழுதப்பட்ட ஒரு கடிதம் சிக்கியது. 
அந்த கடிதத்தில் நான் ஒரு பேய்… இந்தக் கொலைகளை நான் தான் செய்தேன் என எழுதப்பட்டிருந்தது. இதைச் சுட்டிக்காட்டிய வழக்கறிஞர்கள், லூசி கழிவிறக்கத்துடன் கூடிய விரக்தியால் வக்கிர புத்தி அடைந்திருக்கலாம் எனவும் வாதிட்டார்கள்.

கவனத்தை ஈர்ப்பதற்காகவா?

செவிலியர் லூசி லெட்பிக்கும் அதே செஸ்டர் மருத்துவமனையில் பணிபுரியும் திருமணமான மருத்துவர் ஒருவருடன் ரகசியமான உறவு இருந்ததாக விசாரணையின்போது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர். அந்த குறிப்பிட்ட மருத்துவர்தான் குழந்தைகள் வார்டில் குழந்தைகக்கு உடல்நலக் குறைவு ஏற்படும் போது சிகிச்சை அளிப்பவர். அப்படிப்பட்ட அந்த மருத்துவரின் தனிப்பட்ட கவனத்தை ஈர்ப்பதற்காக லூசி இப்படிச் செய்திருக்கலாம் என்பதும் காரணமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால் அந்த மருத்துவருக்கு ஹார்ட் எமோஜிஸ் அனுப்புவதும் அடிக்கடி மெசேஜ் அனுப்புவதையம் வழக்காக கொண்டிருந்தாராம் லூசி. குழந்தைகள் வார்டில் இருந்து லூசி நீக்கப்பட்ட பிறகும் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியிருப்பதற்கான ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

மனப்பிறழ்வு காரணமா?

லூசி மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டவராக இருந்திருக்கிறார். இதை அவரது சொந்த டைரிக் குறிப்புகள் உறுதிப்படுத்தியுள்ளது. என்னால் குழந்தைகளை சரிவர கவனித்துக்கொள்ள முடியவில்லை, அதனால் அவர்களை நான் கொலை  செய்தேன் என்றும், என்னால் ஒரு போதும் திருணம் செய்து கொள்ளவோ, குழந்தைகள் பெற்றுக் கொள்ளவோ முடியாது. அதனால் குடும்பம் என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது… இப்படியெல்லாம் தன் கைப்பட எழுதி வைத்திருந்திருக்கிறார் லூசி லெட்பி.

லூசி லெட்பி ஒரு Brand 5 Nurse என்கிறார்கள். அப்படியென்றால் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காகவே சிறப்பு பயிற்சி பெற்ற திறமையான செவிலியர் அவர். ஆனால் அவர் குழந்தைகளை கொன்றிருக்கிறார். அதுவும் குழந்தைகளை கொல்வதற்கும், துன்புறுத்துவதற்கும் அவர் பயன்படுத்திய எதையும் ஆயுதம் என்றே சொல்ல முடியாது. வெறும் ஊசியில் காற்று நிரப்பி நரம்பில் செலுத்துதல், குழந்தைகளுக்கு இன்சுலின் மருந்தை ஏற்றுதல், அதிகப்படியான பாலை குழந்தைகளுக்கு புகட்டுததல் இப்படித் தான் குழந்தைகளை கொலை செய்திருக்கிறார்.

இவை எல்லாமே மருத்துவ உபகரணங்கள். எதை ஆயுதம் என்று சொல்வது என்று வேதனையோடு வாதிடுகிறார் அரசுத்தரப்பு வழக்கறிஞர் பாஸ்கல் ஜோன்ஸ். காரணங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 7 குழந்தைகளை கொன்றவர் லூசி லெட்பி தான் என நீதிமன்றம் கூறிவிட்டது. அவருக்கான தண்டனை திங்கட்கிழமை உறுதிசெய்யப்பட உள்ளது.

Source:news18


 



Post a Comment

0 Comments