
"வேட்டை" சஞ்சிகை 8வது வருடத்தில் காலடி வைத்துள்ளது. . இது 2016 ஆகஸ்ட் 27 ஆம் திகதி ஆரம்பித்த முதல் சில மாதங்களாக தினசரி முகநூல் மின்னிதழ் சஞ்சிகையாகவே வெளி வந்தது .
அதன் பின் வாரம் இரு முறையாகி தற்போது இணையத்தள மின்னிதழாக உலகம் முழுதும் வெற்றி கரமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது .
பல மின்னிதழ் சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் வெளி வந்தாலும் "மலையகத்தின் தமிழகம்" என சான்றோர்கள் போற்றிய கல்ஹின்னை மண்ணில் உருவான "வேட்டை" சஞ்சிகைக்கென தனிச் சிறப்புகள் பல உண்டு .
சினிமாவையும்,ஆபாசங்களையும்,மத நிந்தனைகள், மனிதகுல ஒற்றுமை மற்றும் நல்லினக்கத்தை சீர்குலைக்கும் கருத்துக்கள்,தீவிரவாதக் கருத்துக்கள் போன்றவற்றை முற்றாக எதிர்க்கிறது வேட்டை.
அத்தோடு தொழில் நுட்ப வளர்ச்சியின் உச்ச கட்டமாக தற்போது அறிமுகமாகியுள்ள செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence)
செய்தி வாசிப்பாளரை இலங்கையில் முதன் முதலில் அறிமுகம் செய்த பெருமை வேட்டைக்கு உண்டு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்.
இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து கதைகள் , கவிதைகள்,கட்டுரைகள்,துணுக்குகள், தகவல்கள் ,உள் நாட்டு வெளி நாட்டு செய்திகள் எனப் பயன் தரும் விடயங்களை மட்டுமே வாசகர்களுக்கு வழங்குகிறது வேட்டை.
பயனுள்ள கருத்துக்களை அழகான சிந்தனையுடன் எழுதும் நல்ல ஆக்கங்களை வரவேற்கிறோம். என்றும் போல் வாசகர்களின் முழுமையான ஆதரவையும் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறது "வேட்டை".
இதுவரை எழுதிய, எழுதிக் கொண்டிருக்கும் அத்தனை எழுத்தாளர்களுக்கும் மற்றும் தொடர்ந்தும் ஆதரவைத் தரும் வாசக அன்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்

.gif)


0 Comments