Ticker

6/recent/ticker-posts

கோவை புத்தகத் திருவிழா

குறளாசான் தமிழ்ச் செம்மல் முனைவர் மு.க. அன்வர் பாட்சாவின், திருக்குறள் அன்வரய்யா எளிய தமிழ் உரை நூல் மறுவெளியீடு மற்றும் அறிமுக மதிப்பீடு விழா


கோயம்புத்தூர் கொடீசியா வளாகத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில்,
அரங்க எண் 145 இல், அக்சயம் வெளியீடு அரங்கத்தில்,21-07-2026 ஆம் நாள் செவ்வாய்க் கிழமை காலை 11-00 மணிக்கு, திருக்குறள்தூதர் தமிழாசான் முனைவர் மு.க.அன்வர்பாட்சா அவர்களின், திருக்குறள் அன்வரய்யா எளிய உரை நூல் மறுவெளியீடு,மற்றும் நூல் அறிமுக மதிப்பீடு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வுக்கு வேளாண் பல்கலைக்கழக மேனாள் இயக்குநர் பேராசிரியர் முனைவர் இரா.விஜயராகவன் அவர்கள் தலைமை தாங்கினார்.

திருக்குறள் ஆய்வுக்கழகச் செயலாளர் வாகை துரைசாமி வரவேற்புரை ஆற்றினார்.

பேச்சாளர் கவிஞர் திருமதி சுடர்விழி பௌசியா பானு அவர்கள் நூல் அறிமுகம் செய்து மதிப்பீட்டு உரையைத் தனக்கே உரிய பாணியில் நெகிழ்வுடன் சபையோர் மனங்கொள்ளும் வகையில் உரை   நிகழ்த்தினார்.

பேராசிரியர் முனைவர் கோமளலட்சுமி, அகவை முதிர்ந்த தமிழறிஞர் பிரேமா,அக்ஷயா பதிப்பக உரிமையாளர் ஆ.சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்வில் பொன்விழா நினைவுப்பரிசுகளும்,நூல்களும் அனைவருக்கும் வழங்கப்பெற்றன.


நிகழ்வில் திருக்குறள் ஆய்வுக்கழகப் பொறுப்பாளர்கள் திரு. சின்னசாமி, திரு.பாண்டியராஜன்,மகளிரணியினர் திருமதி பரமேஸ்வரி,தட்டச்சர் கணினித்தாரகை பானுமதி,திருமதி கிரேஸி லாவண்யா, அன்பு மாணவன் அஸ்வத்,திருமதி அன்னதனலட்சுமி மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் பலரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

நிகழ்வில் சிறப்புவிருந்தின ராகப் பன்முகத் திறனாளர் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

நிறைவாகத் திருக்குறள் ஆய்வுக்கழகத் துணைத்தலைவர் பாண்டியராஜன் நன்றி நவிலலுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.


 


Post a Comment

0 Comments