Ticker

6/recent/ticker-posts

அன்புக்கு இல்லை பூட்டு... சிறையில் திருமணம்


சிங்கப்பூரில் தம்பதி ஒன்று திருமணத்தைச் சிறைப் பள்ளியில் நடத்தியிருக்கின்றனர்.

தமது வருங்காலக் கணவரைக் கரம்பிடிக்கச் சிறைக்கு விண்ணப்பம் அனுப்பி அனுமதி கேட்டார் நூராஷிக்கின் ஹுஸ்னி தம்ரின் (Nurashikin Husni Thamrin) எனும் சிங்கப்பூர்ப் பெண்.

அவர்களது திருமணம் 2017ஆம் ஆண்டு நடைபெற நிச்சயிக்கப்பட்டிருந்தது.

திருமணத்துக்கு இரண்டே வாரங்கள் எஞ்சியிருந்த போது நூராஷிக்கினின் வருங்கால கணவர் ஃபாரிட் அஷிம் (Faredz Ashim) போதைப்பொருள் வழக்கில் சிக்கினார்.

அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிறையிலிருக்கும் அவரைத் திருமணம் செய்ய அனுமதி கேட்டு நூராஷிக்கின் விண்ணப்பம் செய்தார்.

8 ஆண்டுகள் முயற்சி செய்தார்; 6 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

ஏழாவது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அவர்கள் கடந்த ஜனவரி 15ஆம் தேதி தானா மேரா சிறைப்பள்ளியில் திருமணம் செய்துகொண்டனர்.

அந்த அனுபவத்தை நூராஷிக்கின் தமது TikTok செயலியில் பகிர்ந்துள்ளார்.

seithi


 


Post a Comment

0 Comments