Ticker

6/recent/ticker-posts

டில்லியில் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி கைது


டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க்கில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பிரதமர் மோடியின் அரசு இல்லத்தின் முன்பு ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று திடீரென போராட்டம் நடத்தினர்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, டெல்லியில் நாடளுமன்றத்தை முற்றுகையிடுவதற்காகக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணி சென்றனர். அவர்களைப் பொலிஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ராஜாஜி மார்க் பகுதியில் இருந்து பிரதமர் இல்லம் அமைந்துள்ள எண்.7, லோக் கல்யாண் மார்க் நோக்கி பேரணி சென்றனர்.

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், பவன் கேரா உள்ளிட்ட மூத்த தலைவர்கள், கேரள முதல்வர் வி.டி.சதீசன் மற்றும் கட்சி எம்.பி.க்கள் பேரணியில் பங்கேற்றனர். பின்னர் பிரதமர் இல்லத்துக்கு வெளியே அவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, மாணவர்கள் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

tamilmirror


 


Post a Comment

0 Comments