
பேய் இருப்பதாக உள்ளூர் வாசிகளால் நம்பப்படும் வீடுகளில் ஒரு இரவு மட்டும் தங்கினால் ரூ.52,000 சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த வினோத வேலை ஜப்பானில் நடக்கிறது. வீட்டை வாடகைக்கு விட ஜப்பானில் வீட்டு ஓனர்கள் இந்த வினோத நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
Japan Bizarre News: வீட்டை வாடகைக்கு விட வீட்டு உரிமையாளர்கள் பல்வேறு சலுகைகளை அறிவிப்பது வழக்கமான ஒன்று தான். சில குறைந்த முன்பணத்தையும், சிலர் இலவச பராமரிப்பு வசதிகளையும் வழங்கி வாடகைதாரர்களை ஈர்க்க முயற்சிப்பார்கள். ஆனால், இதையெல்லாம் மிஞ்சும் வகையில், ஒரு வினோத ஆஃபரை வீட்டு உரிமையாளர்கள் அறிவித்துள்ளது.
பேய் வீட்டில் தங்க ரூ.52,000 சம்பளம்
பேய் இருப்பதாக நம்பப்படும் வீடுகளில் ஒரே ஒரு இரவு தங்கினாலே ரூ.52,0000 சம்பளமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பொதுவாக பேய் வீடு என்றாலே மக்கள் தெறிந்து ஓடுவார்கள். ஆனால், ஜப்பானில் இந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இந்த வினோத யோசனை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஜப்பானில் கொலை, தற்கொலை, உயிரிழப்பை ஏற்படுத்திய தீ விபத்து, தனிமை மரணம் உள்ளிட்ட காரணங்களால் இதுபோன்ற வீடுகளில் பலரும் தங்க முன்வரவில்லையாம். ஜப்பான் சட்டத்தின்படி, இதுபோன்ற சம்பவங்கள் நடந்த வீட்டின் வரலாற்றை, அந்த வீட்டை வாங்கவோ அல்லது வாடகைக்கு எடுக்கவோ விரும்பும் நபர்களிடம் ரியல் எஸ்டேட் முகவர்கள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
இதன் காரணமாக, இத்தனைய மரணம் நடந்த வீடுகளில் பலரும் குடியேற தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதனால் தான், இத்தகைய வீடுகளில் ஒரு இரவு தங்கி அசாதாரண நிகழ்வும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் பணிக்காக சில நபர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர். உள்ளூர் வாசிகளால் நம்பப்படும் பேய் வீடுகளின பணியில் ஈடுபடுபவர்கள் ஒரு முழு இரவு தங்கி, கேமராக்கள் மற்றும் பிற கண்காணிப்பு கருவிகள் உதவியுடன வீட்டில் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
என்ன காரணம்?
அந்த நேரத்தில் எந்தவித அசாதாரண அல்லது விளக்க முடியாத சம்பவங்களும் நடக்கவில்லை என்றால், இந்த வீட்டில் எந்த ஒரு பேய் மற்றும் அமானுஷ்ய செயல்பாடுகளும் கண்டறியப்படவில்லை என்று சான்றிழ் வழங்கப்படும். மேலும், சில நிறுவனங்கள் ஒரு வீட்டை பேய் இல்லாத வீடு என்று சான்று அளித்த பிறகும், பின்னர், அமானுஷ்ய சம்பவங்கள் நடந்து உறுதியாக நிரூபிக்கப்பட்டால், அதற்கான இழப்பீட்டை வாடகைதாரர்களுக்கு வழங்கப்படும் என கூறுகின்றன. இந்த வேலை ஜப்பானில் நாளுக்கு நாள் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. காரணம், அந்நாட்டில் காலியாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது தான்.
வயதானவர்களின் மக்கள் தொகை அதிகரிப்பு, பிறப்பு விகிதம் குறைவு, மக்கள் நகர்களை நோக்கி இடம்பெயர்வது போன்ற காரணங்களால் ஜப்பானில் கோடிக்கணக்கான வீடுகள் காலியாக உள்ளன. பேய் வீடு அல்லது துரதிர்ஷடம் நேர்ந்ததாக கரதப்படுகிறது. ஸ்டிக்மடைஸ்டு என்று சொல்லப்படும் சொத்துகள் பல ஆண்டுகள் விற்பனை செய்யப்படாமலும், வாடகைக்கு விடப்படாமலும் இருக்கின்றன. இதனால், இதுபோன்ற மற்ற வீடுகளும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. குறைந்த வாடகைக்கு விடப்படுவதாக உள்ளூர் வாசிகள் கூறுகின்றன.
இதனால், உள்ளூர் வாசிகளால் நம்பப்படும் பேய் வீடுகளில் ஒரே இரவில் தங்க ரூ.52,000 சம்பளம் என்ற வேலையை வீட்டு உரிமையாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பேய் வீடுகள் குறித்த மக்களின் மனதில் இருக்கும் அச்சத்தையும் மூட நம்பிக்கையையும் போக்கி, வீட்டு உரிமையாளர்கள் அந்த வீடுகளை எளிதாக வாடகைக்கு விடவோ அல்லது விற்பனை செய்யவோ இந்த வேலையின் நோக்கமாகும். மேலும், பல ஆண்டுகளாக காலியாக கிடக்கும் வீடுகளை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதிலும் இந்த வேலை முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments