Ticker

6/recent/ticker-posts

கட்டாருடன் முதலீட்டு மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த இலங்கை நடவடிக்கை!



தோஹாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கையின் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, கட்டார் சேம்பரின் முதலாவது துணைத் தலைவர் மொஹமட் பின் அஹமட் பின் துவார் அல் குவாரியை சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கை மற்றும் கட்டார் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான நேரடி தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கொழும்பு போர்ட் சிட்டி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள், பொருளாதார ஸ்திரத்தன்மை, நிதி ஒழுக்கம் மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பிலும் கட்டார் சேம்பருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையின் முதலீட்டு சூழலை கத்தார் வர்த்தக சமூகத்தினருக்கு அறிமுகப்படுத்தும் வகையில், இலங்கைக்கு வருகை தந்து முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறும் கத்தார் சேம்பர் மற்றும் கட்டார் வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், “Sri Lanka Expo 2027” கண்காட்சியில் கட்டார் வர்த்தக சமூகத்தினர் பங்கேற்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கண்காட்சி 2027 ஜனவரி 14 முதல் 17 வரை கொழும்பில் நடைபெறவுள்ளது.

கட்டாரிலுள்ள இலங்கைத் தூதுவர் ரொஷான் சித்தாரா கான் அசார்டோவும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்

இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் தனியார் துறை ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்த சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.

thinakaran


 


Post a Comment

0 Comments