உலகிலுள்ள அனைத்து நாடுகளிலேயும் மக்கள் வசிப்பதற்கு உகந்த அடிப்படை கட்டமைப்புகள், இயற்கையோடு தொடர்புடைய அத்தியாவசிய அம்சங்கள் இருப்பது கிடையாது.
உலக அரங்கில் பரீட்சயமான ஓரளவு மக்கள் தொகை கொண்ட நாடுகளில் கூட இத்தகைய அம்சங்கள் இல்லாத நிலை காணப்படுகிறது.
அத்தகைய நாடுகளில் சிலவற்றை இப்பதிவின் மூலமாக காணலாம்.
விவசாய நிலம்
சுமார் 730 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சிங்கப்பூரில் ஒரு சதவீதம் அளவிலான நிலப்பரப்பே விவசாய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. முட்டை, கடல் உணவுகள் மற்றும் சில வகை காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
வீட்டின் மாடித்தோட்டங்கள், குறுகிய பரப்பு கொண்ட பண்ணைகளில்தான் விளைச்சல் நடைபெறுகிறது. பெரும்பாலான உணவு வகைகளுக்கு இறக்குமதியையே சார்ந்துள்ளது.
மொனாக்கோ நாட்டில் விவசாயத்திற்கு ஏற்ற நிலப்பகுதிகள் இல்லை. அதனால் அங்கு வணிக ரீதியாக விவசாயம் மேற்கொள்ளப்படுவதில்லை. அனைத்து வகை உணவுப்பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. அவற்றில் சில பதப்படுத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
44 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட வத்தீகான் நகரிலும் விவசாயம் நடைபெறுவதில்லை.
நதிகள்
2.15 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட சவூதி அரேபியாவில் நிரந்தரமான நதிகள் எதுவுமே இல்லை. ஆனால் வாடிகள் எனப்படும் நீர்வழிந்தோடும் பள்ளத்தாக்குகள் உள்ளன.
அவற்றில் நீர் தேங்கி இருக்கும். சில சமயங்களில் வறண்டும் காணப்படும்.
5,27,968 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட ஏமன் நாட்டிலும் நதிகள் இல்லை. வறண்ட கால நிலை, பரந்து விரிந்த பாலைவன பகுதிகள் ஏமனை ஆக்கிரமித்திருக்கின்றன. அதனால் நிரந்தரமான
நதி அங்கு இல்லை. பள்ளத்தாக்கு பகுதிகள், ஆற்றுப்படுக்கைகள்தான் உண்டு.
3,09,501 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட ஓமன் நாட்டிலும் வற்றாத நதிகள் எதுவும் கிடையாது.
இருப்பினும், சிறிய எண்ணிக்கையிலான நீர் நிலைகள் காணப்படுகின்றன. அல் ஹஜர் மலைகளிலும், அவற்றின் அடிவாரத்திலும் அவற்றை காணலாம்.
குவைத் நாடு 17,818 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இதுவும் நதி இல்லாத மிகப்பெரிய நாடுகளுள் ஒன்றாக விளங்குகிறது. அங்கும் சில வாடிகள் எனப்படும் நீர் நிலைகள் காணப்படுகின்றன.
ஆனாலும் அவை நீர் மேலாண்மையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
காடுகள்
காடுகள் நிறைந்த நிலப்பரப்பு பெரிய அளவில் இல்லாத நாடுகளுள் ஒன்றாக கிரீன்லாந்து விளங்குகிறது. அங்கு குறுகிய பள்ளத்தாக்கு பகுதியில் செடி, கொடிகள், மரங்கள் வளர்வதை இயற்கையான காடாக கருதுகிறார்கள்.
கட்டாரில் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக அங்கு இயற்கை தாவர இனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. அங்கு பெரிய பரப்பளவில் காடுகளோ, வனப்பகுதியோ இல்லை.
ஓமனில் பெரிய அளவில் வனப்பகுதிகள் இல்லை. அங்கு 2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி மொத்த நிலப்பரப்பில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே (0.00808 சதவீதம்) தாவர இனங்கள் உள்ளன.
61.2 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள சான் மரினோவும் அடர்ந்த காடுகள் கொண்ட நிலப்பரப்பு இல்லாத நாடாக விளங்குகிறது. அங்கு குறைந்த அளவிலேயே வனம் சார்ந்த சூழல் நிலவுகிறது.
மலைகள்
டென்மார்க் தட்டையான நிலப்பரப்பு கொண்ட, கடலோரம் அமைந்திருக்கும் நாடு. கடல் மட்டத்தில் இருந்து சராசரி உயரத்தில்தான் இருக்கிறது. அதனால் உயரமான மலைப்பகுதிகள் என்று எதுவும் கிடையாது. டென்மார்க்கின் மிக உயரமான இடம் வெறும் 171 மீட்டர்தான். (561 அடி)காம்பியாவில் மலைகளோ, குறிப்பிடத்தக்க உயரமான பகுதிகளோ இல்லை. சிறிய உயரம் கொண்ட சில செங்குத்தான மலைகள் உள்ளன. மிக உயரமான இடம் கடல் மட்டத்தில் இருந்து 53 மீட்டர் (173 அடி) தூரத்தில் உள்ளது.
கத்தாரின் பெரும்பகுதி தட்டையான, தாழ்வான நிலப்பரப்பு கொண்ட பாலைவனமாக காட்சி அளிக்கும். அங்குள்ள அபு அல்-பவுல் மலைதான் உயரமான இடமாகும். அதன் உயரம் கூட 103 மீட்டர் (335 அடி)தான்.
மாலைத்தீவிலும் உயரமான மலைகள் எதுவும் இல்லை. சில தீவுகளில் கடல் மட்டத்தில் இருந்து 2.4 மீட்டர் (7.9 அடி) உயரம் கொண்ட குன்றுகள் உள்ளன.
விமான நிலையம்
467.6 சதுர கி.மீ. பரப்பளவும், சுமார் 77 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஐரோப்பிய நாடான அன்டோரா நாட்டில் விமான நிலையம் இல்லை. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளுடனும் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
அன்டோராவிற்கு நேரடி விமானங்கள் இல்லை என்றாலும், பார்சிலோனா, ஜிரோனா, துலூஸ், லீடா, பெர்பிக்னன் ஆகிய இடங்களுக்கு விமானத்தில் பறந்து சென்று, அங்கிருந்து அண்டோராவை அடையலாம்.
160 சதுர கி.மீ மற்றும் சுமார் 37,800 மக்கள்தொகை கொண்ட மற்றொரு ஐரோப்பிய நாடான லிச்சென்ஸ்டைனிலும் விமான நிலையம் இல்லை.இது அன்டோராவுக்கு அடுத்தபடியாக விமான நிலையம் இல்லாத இரண்டாவது பெரிய நாடாக அறியப்படுகிறது.
61.2 சதுர கி.மீ. மற்றும் சுமார் 33,400 மக்கள்தொகை கொண்ட சான் மரினோ விமான நிலையம் இல்லாத மூன்றாவது பெரிய நாடாகும்.
அதேபோல், 202 ஹெக்டேர் மற்றும் சுமார் 38,700 மக்கள்தொகை கொண்ட மொனாக்கோ நாட்டிலும் விமான நிலையம் இல்லை.
சுமார் 800 மக்கள்தொகை கொண்ட வத்தீகான் நகரத்திலும் விமான நிலையம் கிடையாது.
ibctamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்