பிரித்தானியாவை உலுக்கிய கொலை வழக்கு... தாயாருக்கும் மகளுக்கும் சிறை தண்டனை விதிப்பு

பிரித்தானியாவை உலுக்கிய கொலை வழக்கு... தாயாருக்கும் மகளுக்கும் சிறை தண்டனை விதிப்பு


பிரித்தானியாவில் தாயார் ஒருவரின் இளம் காதலனைக் கொன்றதற்காக சமூக ஊடக செயல்பாட்டாளரும் அவரது தாயாரும் ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர்.

 
நெருக்கமாக இருந்த போது

மூன்றாண்டு ரகசிய காதலை வெளிப்படுத்த இருப்பதாகவும், நெருக்கமாக இருந்த போது பதிவு செய்த காணொளியை வெளியிடுவதாக மிரட்டியதாகவும் கூறி, அந்த இளைஞரை சாலை விபத்தை ஏற்படுத்தி இந்த தாயாரும் மகளும் கொலை செய்துள்ளனர்.

இந்த வழக்கில் மகேக் புகாரி மற்றும் அவரது தாயார் அன்ஸ்ரீன், நண்பர்களான ரயீஸ் ஜமால் மற்றும் ரேகான் கர்வான் ஆகியோரும் நீதிமன்றத்தால் கொலைக் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டனர்.

இவர்களுடன் மேலும் மூவர் இந்த வழக்கில் குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 11ம் திகதி ஹாஷிம் இஜாசுதீன் மற்றும் சாகிப் ஹுசைன் ஆகிய இருவரும் மகேக் புகாரி என்பவரை சந்திக்கும் பொருட்டு ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள பான்பரியிலிருந்து லெய்செஸ்டர் வரை தங்கள் காரில் பயணம் செய்தனர்.

3,000 பவுண்டுகளுக்கு

மகேக் புகாரியின் தாயார் 47 வயதான அன்ஸ்ரீன் உடன் நெருக்கமாக இருந்த காணொளி மற்றும் புகைப்படங்களை வெளியிட இருப்பதாக 21 வயது சாகிப் ஹுசைன் மிரட்டியதை அடுத்து, 3,000 பவுண்டுகளுக்கு இந்த விவகாரத்தை முடித்துக்கொள்ள மகேக் புகாரி ஒப்புக்கொண்டிருந்தார்.

அந்த தொகையை பெறும் பொருட்டே தமது நண்பரான ஹாஷிம் இஜாசுதீன் உடன் சாகிப் ஹுசைன் சென்றுள்ளார். ஆனால் மகேக் மற்றும் அவரது தாயார் சாகிப் ஹுசைனை பதுங்கியிருந்து தாக்க திட்டம் தீட்டினார்.

அதன் படி மகேக் மற்றும் சிலர் சேர்ந்து சாகிப் ஹுசைன் சென்ற வாகனத்தை அடையாளம் கண்டு, துரத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் மணிக்கு சுமார் 100 மைல் வேகத்தில் சென்ற சாகிப் ஹுசைனின் கார் விபத்தில் சிக்கி இரண்டாக பிளந்துள்ளது.

ஆயுள் தண்டனை

அத்துடன் நெருப்பு கோளமாக மாறியுள்ளது. இதில் அந்த வாகனத்தில் உள்ளேயே சிக்கிக்கொண்ட ஹாஷிம் இஜாசுதீன் மற்றும் சாகிப் ஹுசைன் ஆகிய இருவரும் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை மொத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், 23 வயதான மகேக் புகாரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது 31 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் அவர் சிறை தண்டனை அனுபவிக்க இருக்கிறார்.

இவரது தாயாரான 47 வயது அன்ஸ்ரீன் என்பவருக்கு 26 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரயீஸ் ஜமால் என்பவருக்கு குறைந்தபட்சம் 36 ஆண்டுகள் சிறை தண்டனையும் 28 வயதான கர்வான் என்பவருக்கு 26 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.

Source:lankasri


 



Post a Comment

Previous Post Next Post