ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் தற்போது மழையால் பாதியில் கைவிடப்பட்டது. ஒரு காலத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது என்றால் நிச்சயம் களத்தில் சண்டை இருக்கும்.
இரு அணிகள் வீரர்களிடையே காரசார விவாதங்கள் எழும். வெற்றிக்காக போர் வீரர்கள் போல் இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள்.
இதனால் ஆட்டத்தில் அனல் பறக்கும் தொலைக்காட்சிகளின் டிஆர்பி ரேட்டிங்கும் விண்ணை முட்டும். இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் கூட இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போது ஆட்டத்தில் அனல் பறந்தது. பாகிஸ்தான் அணியின் வேகத்தை எதிர்கொள்ள இந்திய அணி வீரர்கள் கடுமையாக தடுமாறினர். முதல் நான்கு வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த பிறகு மீண்டும் இந்திய அணியில் இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஜோடி தக்க பதிலடி கொடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
ஆனால் மழை காரணமாக போட்டி முடிவில்லாமல் கைவிடப்பட்டது. ஒரு காலத்தில் எலியும் பூனையுமாக இருந்த இந்திய பாகிஸ்தான் அணி வீரர்கள் தற்போது நண்பர்கள் போல் சுற்றி திரிந்து வருகிறார்கள். களத்தில் தான் நாங்கள் சண்டை செய்வோம். களத்திற்கு வெளியே நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்பது போல் ஒருவருக்கொருவர் அன்பை பறைசாற்றி வருகிறார்கள். வானத்தைப் போல படத்தில் வருவது போல் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்று பாட்டு மட்டும் போடாமல் இரு அணி வீரர்களும் போட்டி முடிந்த பிறகு உற்சாகமாக ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து பேசிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக விராட் கோலி ஹாரிஸ் ரவுப், பாபர் அசாம் போன்ற வீரர்கள் நீண்ட நேரம் மழை பெய்த நிலையில் தங்களுடைய நேரத்தை ஒன்றாக செலவிட்டனர்.
ஆட்டம் கைவிடப்பட்ட பிறகு இரு அணி வீரர்களும் ஒன்றாக இணைந்து தங்களுக்குள் சிரித்து பேசி மகிழ்ந்தனர். இதனை எல்லாம் பார்க்கும் போது இரு நாட்டுக்கு இடையே எவ்வளவு பகை அரசியல் இருந்தாலும் விளையாட்டு எப்படி நட்பை ஏற்படுத்துகிறது என்று அனைவருக்கும் உணர்த்தியது. என்னதான் பகை இருந்தாலும் அன்பும் நட்பும் தான் மனிதர்களுக்கு அழகு என்பதை இந்தியா பாகிஸ்தான் வீரர்கள் நிரூபித்து விட்டார்கள்.
Source:mykhel
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
விளையாட்டு