குறள் 925
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.
தம்பி.. ஒருத்தன் தன்னையே மறந்து எப்பமும் ஒரு கிறக்கத்துலயே இருக்கதுக்காக கைக் காசு செலவழிச்சு போதைப் பொருள் வாங்குதாம்னு வச்சுக்க.. அது பெரிய முட்டாள் தனம் தம்பி..
குறள் 929
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
மாப்ள.. குடிகாரனை அறிவுரை சொல்லில்லாம் திருத்த முயற்சிக்கது எப்படி இருக்கும் தெரியுமா? தண்ணீர்ல முங்கிட்ட ஒருத்தனை கையில தீப்பந்தத்தை வச்சுக்கிட்டு தேடுதமாதிரி இருக்கும் தம்பி..
குறள் 930
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
தம்பி... தண்ணி வண்டி ஒருத்தன், தண்ணி போடாத நேரத்துல, வேற ஒருத்தன் தண்ணி அடிச்சிட்டு பண்ணுத சிலம்பல்களை பாக்காம்னு வச்சுக்கயேன்.
அப்பம் நாமளும், தண்ணி அடிச்சிருக்கும் போது இப்படித்தான் கேவலமா நடந்திருப்போமோன்னு நினைச்சுப் பாக்க மாட்டானா தம்பி.
குறள் 931
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
மாப்ள.. நமக்கு வெற்றி கிடைக்கும்னு நம்புனாலும், இந்த சூதாட்டம் நடக்க பக்கம் தலை வச்சே படுத்துறக் கூடாது.
சூதாட்டத்துல கெடைய்க்க வெற்றி எப்படின்னா, தூண்டில்ல மாட்டியிருக்க புழுவை சாப்பிடுவதா நெனச்சு அந்த தூண்டில் முள்ளுல போய் மாட்டிக்கிடுதது மாதிரி மாப்ள.
குறள் 935
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.
மாப்ள.. சூதாட்டத்துல பயன் படுத்துத தாயக் கட்டை, சீட்டுக் கட்டு, வெளையாடக் கூடிய இடம், சூதாடுத தெறமையை நினைச்சு பெருமைப் படுதது... இதையெல்லாம் ஒருத்தன் விட்டுத் தொலைய்க்காட்டா, அவன் எம்புட்டு பெரிய பணக்காரனா இருந்தாலும், ஒண்ணும் இல்லாம போயிருவான் மாப்ள.
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
செந்தமிழ் இலக்கியம்