கண்டிக்கவும் வேண்டாம் தண்டிக்கவும் வேண்டாம்!

கண்டிக்கவும் வேண்டாம் தண்டிக்கவும் வேண்டாம்!


ஒரு காலமிருந்தது

ஆசிரியர் என்றாலே
ஒரு மரியாதை
பாலர் முதல்
பாமரர் உற்பட
அகவை முதிர்ந்தோர் வரை
அவர்களாகவே
எழுந்துதான் நிற்பர்
வாக்கிற்கும்
முடிவிற்கும்
கீழ்படிந்த சமுதாயமாய்
சாதனைகள் இல்லாமலில்லை
சாணக்கியராய்
வழிநடத்திட
வாழ்நாள் முழுதும்
மணம்கமழும்
அவர்களின் அன்பும் வாக்கும்.......

இன்றோ
அறிவு மூலதனமில்லை
அவர்களும் 
ஆசான்களாம்
ஒழுக்கமின்றி சிலர்
பாகுபாடுகளுடன் சிலர்
திருடர்களாயும் சிலர்
மது போதை அடிமைகளாய் சிலர்
மனித தன்மை அற்ற 
மிருகமாயும் சிலர்
வியாபாரிகளாய் சிலர்
விசித்திர முரண்பாடாய் சிலர்
வலைத்தள மோகத்தில் சிலர்
வரைவிலக்கணத்தின்
அப்பாலும் சிலர்
எதை கற்பிக்க வந்தனரோ
வரும்சந்ததி என்னாகுமோ
என்பதற்குள்..... .

தெய்வத்திற்கு
முன் குரு என்பதன்
பொருள் மாறியதாய்
வரைமுறைகள்
தவறினை காண்கையில்
கண்களை மூடிக்கொள்வீர்
காணாமல் நகர்ந்திடுவீர்
கண்டிக்கவும் வேண்டாம்
தண்டிக்கவும் வேண்டாம்
மாணவர் தம்
மனம் நோகாமை வேண்டும்
அடியாதே... மாடு படியாது
என்னும்
புது வரைமுறைகளால்
நல்லாசான்களும்
இன்று
கையறுநிலையில்.......!

ருக்ஸானா நயீம்


 



Post a Comment

Previous Post Next Post