குறள் 1119
மலரன்ன கண்ணாள்
முகமொத்தி யாயின்
அத்தைமடி
மெத்தையடி
என்று பாடி
என்தம்பி குழந்தையைத்
தூங்கவைத்துக்
கொண்டிருக்கின்றேன்!
நிலவே!
நீஏன் அடிக்கடிவந்து
பார்க்கிறாய்?
மலர்போன்ற விழிகொண்ட
இவள்முகம் போல
நீமாற நினைத்தால்
என்முன் தோன்று!
பலர்காண தோன்றாதே!
குறள் 1120
அனிச்சமும் அன்னத்தின் தூவியும்
மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்.
அமுதக்கலசம்
போன்ற
என்மகளின்
பஞ்சுமென்மைப்
பாதங்களுக்கு
அனிச்சம்பூவும்
அன்னத்தின் பட்டுப்போன்ற
இறகும்
நெருஞ்சிப்பழமாக
உறுத்துமே!
குறள் 1121
பாலொடு தேன்கலந் தற்றே
பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்.
பால்பற்கள் முளைத்தநிலை!
மழலை பேசுகின்ற
என்குழந்தை
வாயொழுகும் உமிழ்நீரோ
பாலும் தே ம்
கலந்த சுவைதரும்
அமுதந்தான்!
உயிரில் கலந்த உறவு
குறள் 1122:
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.
என் செல்லமே!
செல்ல மகளே!
நீயும் நாம்
உயிரும் உடம்பும் போல
பிரிக்க முடியாத உறவு!
பிரிவுக்கு இடமே இல்லையம்மா!
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
செந்தமிழ் இலக்கியம்