
அந்த சமயத்தில் அவருக்கு வித்தியாசமான பிரம்மைகள் தோன்றியுள்ளன. அதைப்பற்றியது தான் இந்தக் கட்டுரை.
தனக்கு பரிசாக 52 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது என்றும் பல கோடீஸ்வரர்களையும் பிரபலங்களையும் சந்தித்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம் என்றும் நம்பிக் கொண்டிருந்த மார்க் கிப்ஸ், கோமாவிலிருந்து விழித்தெழுந்தார். அதன்பிறகு தான் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. உண்மை உரைக்க ஆரம்பித்தது. தற்போது இவரின் கதைதான் இணையம் முழுதும் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தன்னுடைய வீட்டில் ஆழ்ந்த தூக்கத்தில் மார்க் இருந்த போது, இந்த கதை தொடங்குகிறது. பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்ததால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மார்க்கை பரிசோதித்த மருத்துவர்கள், தீவிர மது மற்றும் போதை பழக்கத்தின் காரணமாக அவருடைய சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர். அதன்பிறகு அவரது நிலைமை மோசமாகி, இரு வாரங்கள் தீவிர கோமாவில் இருந்தார்.
கோமாவிலிருந்து நினைவு திரும்பினாலும், தனக்கு ஏற்பட்ட மாயையை உண்மையென நம்பிக் கொண்டிருந்தார் மார்க். தான் கோடீஸ்வரனாகி விட்டோம் என அவர் உறுதியாக நம்பினார். தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள், அதிகாரமிக்க நபர்கள் போன்றோர் அவருடைய நெருங்கிய நண்பர்களாகவும், தன்னை நேரில் சந்திக்க அவர்கள் அனைவரும் விரும்பியதகவும் இவரது பிரம்மையில் தோன்றியுள்ளது.
தான் கோடீஸ்வரனாக மாறிவிட்டோம், வசதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம், பல பிரபலங்களின் தொடர்பு தனக்குள்ளது, எனக்கு கிடைத்த அதிர்ஷடத்தை எல்லாம் உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என தான் கற்பனையில் நினைத்ததை எல்லாம் உண்மை என குடும்பத்தினரோடு ஆர்வமாக சொல்லிக் கொண்டிருந்தார் மார்க்.
ஆனால் உண்மை ஒருநாள் வெளிவந்து தானே ஆக வேண்டும். தங்கள் அன்புக்குரிய ஒருவர், பிரம்மைகள் காரணமாக மோசமான விளைவுகளை அனுபவிப்பதை கண்டு மார்க்கின் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்கள்.
தனக்கு நேர்ந்த அனுபவத்தை ஊடகத்திடம் பகிர்ந்து கொண்டார் மார்க். தனக்கு கிடைத்த பணம், சந்தித்த பிரபலங்கள் என அனைத்தும் வெறும் பிரம்மைகள் என தெரிந்துகொண்ட போது மிகப்பெரிய வருத்தம் உண்டானதாக கூறுகிறார் மார்க். பலரது கவனமும் தன் மீது படர்ந்துள்ள நிலையில், இதையொரு நல் வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு மது மற்றும் போதை பழக்கத்தால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து அனைவருக்கும் பாடம் எடுத்து வருகிறார் கிப்ஸ். எனக்கு ஏற்பட்டுள்ளது போல் உங்களுக்கும் நடக்க கூடாது என நினைத்தால், இன்றே மதுப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கத்தை கைவிடுங்கள் என எச்சரிக்கிறார்.
SOURCE:news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்

.gif)



0 Comments