
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷோயப் (30). இவர் நேற்று அவரது வீட்டில் இருந்து அருகில் உள்ள பகுதிக்கு தனது, குழந்தையை தோளில் தூக்கிக்கொண்டுச் சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த மர்ம கும்பல் ஒன்று, ஷோயப் நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளது. இதில் குழந்தையுடன் கீழே சரிந்தார். ஷோயப் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஷோயப் உடல்நிலை கவலைகிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இதுதொடர்பாக விசாரணையை தொடங்கிய போலிஸார் தாரிக், குஃப்ரான், நதீம் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குஃப்ரான், நதீம் ஆகிய இரண்டு பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஷோயப்புக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சாந்தினி என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
UP Man, Carrying Little Daughter On Shoulders, Shot At Close Range#shahjahanpur #IndependenceDay2023 #15august2023 #AkshayIndianKumar Akshay Kumar Red Fort Hindustani #FireStormIsComing #WakeUpTeamSALAAR Action King Georgia #IndianCitizenship Hindustani #Fighter #zadakhabar pic.twitter.com/kQsi9KJ1sU
— zadakhabar (@zadakhabar) August 15, 2023
திருமணத்திற்கு முன்பு சாந்தினிக்கும் தாரிக்கின் சகோதரருக்கும் இடையே நிச்சயம் நடந்ததாகவும் ஆனால் தாரிக்கின் சகோதரர் மீது இருந்த அதிருப்தி காரணமாக, சாந்தினியை ஷோயப்புக்கு திருணம் செய்து வைத்துள்ளனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த தாரிக் பழிவாங்க இந்த சமபவத்தை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தாரிக்கை தேடும் பணியில் போலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
SOURCE:kalaignarseithigal
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்

.gif)



0 Comments