Ticker

6/recent/ticker-posts

கனடா ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு


வயது போனோலே ஞாபக மறதி தானாகவே வந்துவிடும்.பொருளை வைத்த இடத்தில் மீண்டும் எடுப்பதற்கு வயதானவர்கள் அலையும் அலைச்சலே தனிதான். 
இவ்வாறு ஏற்படும் ஞாபக மறதி நோய்க்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பது தொடர்பாக கனடா ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

உடற்பயிற்சி மற்றும் மூளை பயிற்சி  ஊடாக

இதன்படி உடற்பயிற்சி மற்றும் மூளை பயிற்சி என்பனவற்றின் ஊடாக ஞாபக மறதி நோயை கட்டுப்படுத்த முடியும் அல்லது ஞாபக மறதி ஏற்படுவதனை தாமதப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒன்றாரியோவில் ஆய்வாளர் மொன்டிரோ ஒடாஸோ தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். மருந்து மாத்திரைகளை விடவும் இந்த உடற்பயிற்சி மற்றும் மூளை பயிற்சி மூலம் ஞாபக மறதி நோயை கட்டுப்படுத்த முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

SOURCE:ibctamil


 



Post a Comment

0 Comments