Ticker

6/recent/ticker-posts

லிவர்பூல் நட்சத்திரம் முகமது சாலாவைப் பெறுவதற்குப் பேரார்வம் காட்டும் சவுதி அரேபிய அணி


(படம்:REUTERS/Carl Recine)

 
லிவர்பூல் (Liverpool) கோல் மன்னன் முகமது சாலாவைப் (Mohamed Salah) பெறுவதற்கு சவுதி அரேபியாவின் அல்-இத்திஹாட் (Al-Ittihad) அணி பேரார்வம் காட்டுகிறது.

31 வயது சாலா, கடந்த 2017இல் ரோமாவிலிருந்து லிவர்பூலில் இணைந்தார். லிவர்பூலில் அவர் இதுவரை 307 ஆட்டங்களில் 187 கோல்கள் அடித்துள்ளார். 80 கோல்கள் போட உதவியுள்ளார்.

இங்கிலீஷ் பிரிமியர் லீக்கின் புதிய பருவத்துக்கான முதல் ஆட்டத்தில் களமிறங்கி கோலும் புகுத்தியிருக்கிறார்.

லிவர்பூலில் கடந்த ஜூலை மாதம் (2023) தமது புதிய ஒப்பந்தத்தில் சாலா கையெழுத்திட்டார். எனவே அவர் அணியை விட்டு வெளியேற வாய்ப்பில்லை என்று அவரது அதிகாரி ஏற்கெனவே கூறியிருந்தார்.

ஆனாலும் சவுதி அணியான அல்-இத்திஹாட் எகிப்தியரான சாலாவை விடுவதாக இல்லை என்று Sky Sports செய்தி கூறுகிறது.

அல்-இத்திஹாட் சாலாவைப் பெற்றுவிடமுடியாது என்பதில் லிவர்பூல் உறுதியாக இருக்கிறது.

ஆனால், சவுதி அரேபிய அணிக்கு மாறினால் அந்த அணி தமக்கு என்ன கொடுக்கும் என்பதை அறிந்துகொள்ள சாலா ஆர்வம் காட்டலாம் என்று கூறப்படுகிறது.

ஒருவேளை சாலா அணிமாறிச் சென்றால் சவுதி Pro லீக்கில் அதிகச் சம்பளம் பெறும் ஆட்டக்காரராக அவரை மாற்ற அல்-இத்திஹாட் தயாராக இருப்பதாக Daily Mail தகவல் வெளியிட்டுள்ளது.

Source:seithi


 



Post a Comment

0 Comments