Ticker

6/recent/ticker-posts

8 வருடமாக வயிற்றில் இருந்த நகவெட்டி.. வாலிபர் சொன்ன காரணத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!


பெங்களூருவை சேர்ந்தவர் ரமேஷ். 38 வயதாகும் இவருக்குத் தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மணிப்பால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

 
அப்போது மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துள்ளனர்.

அப்போது வயிற்றுக்குள் நகவெட்டி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிறகு இது எப்படி வயிற்றுக்குள் என்று என ரமேஷிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர் சொன்ன காரணம் மருத்துவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. ரமேஷ் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் மறுவாழ்வு மையத்தில் சேர்ந்துள்ளனர்.

அங்குச் சித்திரவதை தாங்க முடியாமல் நகவெட்டியை விழுங்கியுள்ளார். இதற்குச் சிகிச்சை எதுவும் மேற்கொள்ளாமல் வாழைப்பழத்தைச் சாப்பிட வைத்து மலம் கழிக்கும் போது வெளியே வந்து விடும் என அவரிடம் கூறியுள்ளனர்.இதை ரமேஷ் அப்படியே நம்பியுள்ளார்.

பின்னர் அங்கிருந்து வெளியே வந்து நடந்த உண்மையைச் சொன்னால் பெற்றோர்கள் திட்டுவார்கள் என கருதி எதையும் சொல்லாமல் இருந்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் மனைவியிடமும் உண்மையைச் சொல்லாமல் இருந்துள்ளார்.

பிறகு 8 வருடங்கள் கழித்து தற்போது வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்று எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோதே உண்மை வெளியே வந்துள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்து நகவெட்டியை வெளியே எடுத்துள்ளனர். தற்போது சிகிச்சைக்குப் பிறகு ரமேஷ் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SOURCE:kalaignarseithigal


 



Post a Comment

0 Comments