ஏஐ துறை இப்போது மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஏஐ துறையில் ஏற்படும் மாற்றங்கள் நம்மை வியக்க வைப்பதாகவே இருக்கிறது. இந்த ஏஐ துறை வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது என்னவோ சாட் ஜிபிடிதான்.
ஏஐ துறையின் வளர்ச்சியையே சாட் ஜிபிடிக்கு முன், சாட் ஜிபிடிக்கு பின் என இரண்டாகப் பிரிக்கலாம். அந்தளவுக்கு நாம் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் வலுவான ஒரு ஏஐ கருவியாக இந்த சாட்ஜிபிடி இருக்கிறது. சாட் ஜிபிடி: இந்த சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் மூளையாகச் செயல்பட்ட சாம் ஆல்ட்மேன் என்பவரே இது குறித்து சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். அவர் ஏற்கனவே இதற்கு முன்பும் பல முறை ஏஐ துறையில் சமூகத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்துத் தொடர்ந்து வெளிப்படையாக எச்சரித்து வருகிறார். இதனால் வேலையிழப்பு ஏற்படும் அபாயமும் இருப்பதாக அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.
ஒரு தரப்பினர் சாட் ஜிபிடி போன்ற கருவிகளால் முழுமையாக மனிதர்களுக்கு வேலையிழப்பு எல்லாம் ஏற்படாது எனக் கூறி வருகின்றனர். அதேநேரம் மற்றொரு தரப்பினர், ஏற்கனவே ஏஐ சாப்ட்வேர்கள் காரணமாக வேலையை இழக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே சாம் ஆல்ட்மேன் இது குறித்து தொடர்ச்சியாக முக்கிய கருத்துகளைக் கூறி வருகிறார். ஏஐ துறையைப் புரட்டிப் போட்டுள்ள சாட்ஜிபிடியை உருவாக்கிய இவரது கருத்தைச் சாதாரண ஒன்றாக நம்மால் கடந்து போய்விட முடியாது. வார்னிங்: கடந்த 2022 நவம்பர் மாதம் சாட்ஜிபிடி வெளியிடப்பட்ட நிலையில், அதன் பிறகு அது குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறி இருப்பதை ஆல்ட்மேன் ஒப்புக் கொண்டார். அதேநேரம் ஏஐ என்பது எப்போதும் பர்பெக்ட்டாக இருக்காது என்றும் அதற்கென தனியாக அதன் வரம்புகள் இருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
அவர் ஏஐ துறைகளால் ஏற்படும் வேலையிழப்புகள் குறித்துத் தொடர்ந்து கவலையெழுப்பி வருகிறார். ஏஐ துறையால் வேலையிழப்புகள் ஏற்படும் என்பதைக் குறிப்பிடும் அவர், தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட பலர், வரும் காலத்தில் உருவாகப் போகும் ஏஐ கருவிகளால் வேலைகளை இழக்கலாம் என்று கூறி வருகிறார். ஏஐ கருவிகள் மக்களின் வேலையைப் பறித்துக் கொள்ளும் எனக் கூறும் அவர், ஏற்கனவே இந்த மாற்றம் ஆரம்பித்துவிட்டதாகவும் எச்சரிக்கிறார். பிரச்சினை: மேலும், ஏஐ கருவிகளால் நமக்குப் பல நன்மைகள் ஏற்படும் என்ற போதிலும் மனிதக்குலத்தில் ஏஐ முற்றிலுமாக பாசிட்டிவ் விஷயங்களை மட்டுமே அள்ளி தருவதாக இருக்காது என்றும் எச்சரித்தார். சிலர் ஏஐ கருவிகள் எப்போதும் மனிதர்களுக்கு உறுதுணையாகவே இருக்கும் என்றும் இதனால் வேலையிழப்புகள் பெரியளவில் ஏற்படாது என்றே கூறுகிறார்கள். ஆனால், ஆல்ட்மேன் இதை மறுக்கிறார். நிச்சயமாக வேலையிழப்பு ஏற்படும் என்பதையே அவர் திரும்பத் திரும்ப கூறி வருகிறார்.
சாட்ஜிபிடியை காட்டிலும் வலுவான மற்றும் சக்திவாய்ந்த ஏஐ கருவிகளை உருவாக்கும் திறன் தனது ஓபன் ஏஐ நிறுவனத்திற்கு இருப்பதாகத் தெரிவித்த அவர், இருப்பினும் அதை இப்போதைக்கு வெளியிட வேண்டாம் என்று தாங்கள் முடிவு செய்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவ்வளவு வலிமையான ஏஐ கருவிகளுக்கு மக்கள் தயாராக இருக்க மாட்டார்கள் என்றும் இதனால் மோசமான விளைவுகளும் கூட ஏற்படும் என்பதாலேயே அதை வெளியிட வேண்டாம் என முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார். வேலையிழப்பு: அவர் சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்த போதும் வேலையிழப்புகள் குறித்து கவலை தெரிவித்தார். ஏஐ காரணமாக நிச்சயம் சில வேலைகள் நிரந்தரமாக மறைந்துவிடும் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். அதேநேரம் புதிய மற்றும் மிகச் சிறந்த பல புதிய வேலைகள் உருவாகும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இந்தியாவில் ஏஐ துறையை ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் அவர் பாராட்டினார்.
இப்படி சாம் ஆல்ட்மேன் தொடர்ச்சியாக ஏஐ கருவிகளால் ஏற்படும் வேலையிழப்புகள் குறித்து கவலை எழுப்பியே வருகிறார். ஏஐ கருவிகள் சமூகத்தை குறிப்பிட தகுந்த அளவுக்கு மாற்றும் என்ற போதிலும், அது சமூகத்திற்குப் பல சவால்களையும் ஏற்படுத்துகிறது. ஏஐ வளர்ச்சி மனிதக்குலத்தின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுவதை உறுதி செய்யவும் மிகப் பெரிய வேலையிழப்புகள் ஏற்படாமல் இருக்கவும் இந்தத் துறையை உலக நாடுகள் ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதையே அவர் வலியுறுத்தி வருகிறார்.
SOURCE:oneindia
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்