வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை கொலை செய்ய முயற்சி… பின்னணியில் யார்?

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை கொலை செய்ய முயற்சி… பின்னணியில் யார்?


வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை கொலை செய்ய அந்நாட்டின் தலைநகரில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
இதையடுத்து அதிபருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பதை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு வடகொரியா அதிபர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே வடகொரிய அதிபரை படுகொலை செய்ய முயன்றவர்கள் யார் என்பது குறித்து அந்நாட்டு உயர் அதிகாரிகள் சந்தேகம் கிளப்பியுள்ளனர்.

அணு ஆயுதத்திற்கு பெயர் போன வடகொரியாவில் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன்னை எதிரிகள் நெருங்காதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் சமீபத்தில் அங்கு தலைநகர் பியோங்யாங்கில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. அதிபரை குறி வைத்து இந்த அசம்பாவிதம் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரிய தீபகற்பம் பகுதியில் ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா ஆகிய வடகொரியாவுக்கு எதிரான நாடுகள் தங்களது போர்ப பயிற்சியை தொடங்கியுள்ளன.இதையொட்டி வடகொரியா கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியது. இதனை அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வடகொரியாவில் நடந்த கொலை முயற்சி 8 வாரத்திற்கு முன்பு நடந்ததாக தகவல் ஒன்று கூறுகிறது. இருப்பினும் பல்வேறு கட்டுப்பாடுகளை மீறி தற்போதுதான் இந்த தகவல் கசிந்திருக்கிறது. இதனை வடகொரிய அதிகாரிகள் மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர். கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடகொரிய அதிபர் மீது நடத்தப்பட்ட முதல் கொலை முயற்சியாக இது கருதப்படுகிறது. இந்த கொலை முயற்சியின் பின்னணியில் தென்கொரியா இருக்கும் என்று வடகொரிய உயர் அதிகாரிகள் சந்தேகம் கிளப்பியுள்ளனர். இருப்பினும் உறுதியான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

இந்த சம்பவத்தை தொடர்ந்து வடகொரியா தனது நட்பு நாடுகளிடமிருந்து நவீனராக கண்காணிப்பு கருவிகள், வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை  இறக்குமதி செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குண்டு துளைக்காத நவீன ரக உடைகள் அதிபர் கிம் ஜோங் உன்னிற்கு தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த உடைகள் தோட்டாக்கள் துளைப்பதில் இருந்து பாதுகாக்கும் என்பதோடு மின்சாரம், கதிர், கதிர்வீச்சு உள்ளிட்டத்தில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள உதவும். இதனை கடந்த சில வாரங்களாக வடகொரிய அதிபர் அணிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source:news18


 



Post a Comment

Previous Post Next Post