
உத்தர பிரதேச மாநிலம் மஹோபா நகரில் ஒரு பெண் தனது காலில் ராஜ நாகப்பாம்பு சுருண்டிருப்பதைக் கண்டு திகிலடைந்து எழுந்தார்.
பாம்பு தானே வெளியேறவதற்கு, தான் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததாக அவரே தெரிவித்துள்ளார்.
உத்தர பிரேதேசத்தின் தஹரா கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் மித்லேஷ் யாதவ் என்ற பெயர் தங்கியுள்ளார். அப்போது, அவரது ஒரு காலில் அசாதாரணமான பிடியை உணர்ந்துள்ளார். அந்த காலை சுற்றி ஒரு ராஜ நாகப்பாம்பு சுருண்டு கிடப்பதை கண்டு மித்லேஷ் அதிர்ச்சியடைந்து, அச்சத்தில் உறைந்து போயுள்ளார். ஆனால் தன் கைகளை இணைத்து, பாம்பு தன்னை காயப்படுத்தாமல் விட்டுவிடுமாறு கடவுளிடம் பிரார்த்தனை செய்ததால் பாம்பு அமைதி காத்துக்கொண்டதாகக் கூறினார்.
“நான் எனது இரண்டு குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தேன். நான் எழுந்தபோது, பாம்பு என் காலில் சுற்றியிருப்பதைக் கண்டேன். நான் என் தாயிடம் குழந்தைகளை அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டேன். பாம்பு வெளியேறும் வரை பல மணி நேரம் காத்திருந்தேன்" என்று ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.
அந்த மூன்று மணி நேரம் அவர் என்ன நினைத்துகொண்டார் என்று கேட்டதற்கு, பாம்புகளை விரும்பவராக அறியப்படும் இந்து கடவுளான சிவபெருமானிடம் தான் பிரார்த்தனை செய்ததாக மித்லேஷ் கூறினார். "எல்லா நேரமும் நான் போலேநாத் (சிவபெருமான்) அவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். அவர் (சிவன்) வந்ததைப் போலவே, தன்னை விட்டு வெளியேறும்படி வேண்டிக் கொண்டிருந்தேன்," என்று மித்லேஷ், பாம்பை கடவுளுடன் அடையாளப்படுத்தினார்.
"ஒரு கணம், நான் உயிர் பிழைக்க மாட்டேன் என்று நினைத்தேன். என் குழந்தைகளைப் பற்றியும், நான் இறந்தால் அவர்களை யார் கவனிப்பார்கள் என்றும் நினைத்தேன். தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். எனது நலனுக்காக எனது குடும்பத்தினரும் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்" என்று மித்லேஷ் மேலும் கூறினார். பாம்பிடம் இருந்து உயர் தப்பி, நான் நலமுடன் வாழ அவரது குடும்பத்தினர் மதச் சடங்குகளைச் செய்ததால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் பிரார்த்தனையில் கலந்துகொண்டதாக அவர் கூறினார்.
குடும்பத்தினரும் காவல்துறையின் உதவியை நாடியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், அப்பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடிப்பவரைத் தொடர்பு கொண்டனர். அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், உலகின் மிக நீளமான விஷப் பாம்பு என்று அழைக்கப்படும் ராஜ நாகப்பாம்பு, அந்தப் பெண்ணின் காலில் இருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொள்ள தொடங்கியது மற்றும் பாம்பு பிடிப்புவர் பிடிப்பதற்கு முன்னரே, அது வீட்டை விட்டு வெளியேறியது. பின்னர், அது யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் வீட்டிற்கு வெளியே சென்றதால், பாம்பு பிடிப்பவர் அதைப் பிடித்து மனிதர்கள் வசிக்காத காட்டில் கொண்டுபோய் பத்திரமாக விட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
Source:zeenews
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்

.gif)



0 Comments