ஏழு பச்சிளம் குழந்தைகள் மரணம்.. கொடூரமாக கொன்ற சீரியல் கில்லர் - இறுதியில் கிடைத்த தண்டனை என்ன?

ஏழு பச்சிளம் குழந்தைகள் மரணம்.. கொடூரமாக கொன்ற சீரியல் கில்லர் - இறுதியில் கிடைத்த தண்டனை என்ன?


லூசி லெட்பி என்ற 33 வயது செவிலியர், ஐந்து சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகளைக் கொன்றதற்காகவும், நவீன மயமாகியுள்ள லண்டன் நகரில் இதுபோன்ற ஒரு கொடூர சீரியல் கில்லரை பார்த்ததில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

 
கடந்த ஜூன் 2015ம் ஆண்டு மற்றும் ஜூன் 2016ம் ஆண்டுக்கு இடையில், வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள கவுண்டஸ் ஆஃப் செஸ்டர் மருத்துவமனையின் பிறந்த குழந்தைப் பிரிவில், அந்த செவிலியர் பாதுகாப்பில் இருந்த பல குழந்தைகள் தொடர்ச்சியாக மரணித்து வந்த நிலையில், சந்தேகத்தின் பெயரில் விசாரணை செய்யப்பட்டு அவர் கைதானது குறிப்பிடத்தக்கது.

லெட்பி பெரும்பாலும் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளை கொன்றதாகவும், குழந்தைகள் உடலில் காற்றை செலுத்தியும், அவர்களுக்கு அதிக பால் ஊட்டுவதன் மூலமாகவும், அல்லது இன்சுலின் மூலம் விஷம் கொடுப்பதன் மூலமும் அந்த 7 குழந்தைகளை அவர் கொன்றது தெரியவந்துள்ளது.

கடந்த அக்டோபரில் தொடங்கிய விசாரணையைத் தொடர்ந்து, மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் உள்ள ஒரு நடுவர்மன்றம் கடந்த வெள்ளிக்கிழமை, சுமார் 110 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த விவாதத்தை முடித்தது வைத்தது. இதில் ஜூரி லெட்பியை மீது சுமத்தப்பட்ட பல கொலை குற்றங்களில் இரண்டு கொலை முயற்சிகளில் இருந்து அவருக்கு விலக்கு அளித்தது. 

லெட்பியால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அளித்த ஒரு கூட்டறிக்கையில், "நியாயம் வழங்கப்பட்டாலும்" அது "நாம் அனைவரும் அனுபவிக்கும் வலி, வேதனையில் இருந்து நமக்கு எந்தவித தீர்வையும் தராது என்று தெரிவித்தனர். அதே சமயம், சில குடும்பஙகள், அவருக்கு குறைந்த தண்டனை வழங்கப்பட்டால் அது ஒரு கசப்பான முடிவாக இருக்கும் என்று கூறினார்.

லெட்பியின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட கையால் எழுதப்பட்ட சில குறிப்புகள் நீதிமன்றத்தால் சமர்ப்பிக்கப்பட்ட சில ஆதாரங்களில் ஒன்றாகும், அவற்றில் "நான் தீயவள் நான் தான் இதைச் செய்தேன்" என்று எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணை நடந்து வரும் நிலையில், அந்த செவிலியருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கிடைத்திருக்கும் ஆதாரங்கள் அவருக்கு எதிராக இருந்தாலும், நான்கு மூத்த மருத்துவர்கள் குழு, மருத்துவமனையின் குறைபாடுகளை மறைப்பதற்காக தன் மீது பழி சுமத்த முயன்றதாக அவர் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

SOURCE:asianetnews


 



Post a Comment

Previous Post Next Post