Ticker

6/recent/ticker-posts

காரில் விசித்திரப் பயணி... இருக்கையில் நின்றுகொண்டிருந்த முரட்டுக் காளை


அமெரிக்காவின் நோர்ஃபோக் (Norfolk) மாநிலத்தில் உள்ள நெப்பிராஸ்கா (Nebraska) நகரில் சென்றுகொண்டிருந்த காரின் இருக்கையில் பெரிய காளை ஒன்று நின்றுகொண்டிருந்தது.
 
அந்தக் காரைக் காவல்துறையினர் நிறுத்தியதாக BBC தெரிவித்தது.

காரின் கூரை பாதியாக வெட்டப்பட்டிருந்ததால் காளையால் காருக்குள் நிற்க முடிந்தது.

கார் ஓட்டுநருக்குக் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

காளையை வீட்டுக்குக் கொண்டுசெல்லும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டதாக BBC தெரிவித்தது.

சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

"மாட்டை ஏற்றிக்கொண்டு கார் ஒன்று நகருக்குள் வருகிறது" என்று தொலைபேசியில் புகார் கிடைத்தபோது காரில் கன்றுக்குட்டி இருக்கும் என்று நினைத்ததாகக் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

Source:seithi


 



Post a Comment

0 Comments