Ticker

6/recent/ticker-posts

பூமிக்கு வரும் ராட்சஷ பூஞ்சை... லட்சக்கணக்கான மக்களுக்கு ஆபத்து - ’புதிய’ நாஸ்ட்ரடாமஸ் கணிப்பு


எதிர்காலத்தில் நடக்கப் போகும் நிகழ்வுகள், சம்பவங்கள் போன்றவற்றை இப்போதே சரியாக கணித்து கூறும் ஆட்கள் உலகம் முழுவதும் இருக்கவே செய்கிறார்கள். 

 
ஆனால், என்ன பிரச்சனையென்றால், பெரும்பாலும் இவர்கள் சொல்வது எதுவும் அப்படியே நடக்காது. அதற்காக இதை முழுதும் ஒதுக்கிவிடவும் முடியாது. உதாரணமாக, 9/11 அன்று இரட்டை கோபுர கட்டிடம் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகும் என பாபா வாங்கா என்பவர் 1989-ம் வருடமே சரியாக கணித்திருக்கிறார். அதேப்போல் பவுல் என பெயரிடப்பட்ட ஆக்டோபஸ், ஒவ்வொரு முறையும் உலக்கோப்பை கால்பந்து போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பதை சரியாக கணித்து கூறியதை அவ்வுளவு சீக்கிரத்தில் யாரும் மறந்திருக்க முடியாது. எனினும், சிலர் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே எதையாவது வித்தியாசமாகக் கூறி பீதியை கிளப்புவார்கள்.

சமீபத்தில் அப்படியொரு நபர்தான் சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறார். அவரை எல்லாரும் 'புதிய' நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கிறார்கள். கூடிய விரைவில் புதிய வகையான ஏலியன் பூஞ்சை ஒன்று பூமியில் நுழைந்து, மக்கள் அனைவரையும் கொல்லப் போவதாக இவர் கணித்திருக்கிறார். இவர் கூறுவது போல் உண்மையில் நடக்குமா? பொறுத்திருந்து பார்ப்போமே!

'புதிய' நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் சாமி ரவ்லின்சன், சமீபத்தில் கூறிய கணிப்பு ஒன்று அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மிகப்பெரிய காளான் ஒன்று விண்வெளியில் இருந்து பூமிக்கு வரவுள்ளதாகவும், அது ஏலியன் பூஞ்சைகளை பரப்பி, பூமியில் உள்ள கோடிக்கணக்கான மக்களை கொல்லப் போவதாகவும் அவர் கூறியிருந்தார். வேற்று கிரகத்திலிருந்து வரும் அந்த ஏலியன் பூஞ்சையானது விரைவில் பூமிக்குள் நுழையப் போவதாகவும், அது கொடிய விஷமுடையது என்றும் சாமி கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, உலகில் உள்ள எல்லாரையும் நோய்வாய்ப்படுத்தும் சக்தி கொண்ட வைரஸ்-ஐ பரப்பும் சக்தி இந்த பூஞ்சைக்கு உள்ளதாகவும் கூறி அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளார்.    அந்த ஏலியன் பூஞ்சைக்கு X என்ற பெயர் சூட்டப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ரயில் விபத்துகள், எரிமலை வெடிப்பு போன்றவற்றை சரியாக கணித்து கூறுவதால் அவ்வப்போது தலைப்பு செய்திகளில் இடம் பிடிப்பார் சாமி. இதற்கு முன்பு கூட அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வளர்ச்சி குறித்தும் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூனின் வீழ்ச்சி குறித்தும் சரியாக கணித்து கூறியிருந்தார் . இவரை சமூக ஊடகத்தில் லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் வசித்து வரும் சாமி ராவ்லின்சன், மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படுகிறார். தங்களுடைய எதிர்காலத்தை பற்றி அறிந்துகொள்ள வெளிநாட்டில் இருந்தெல்லாம் பலரும் இவரைத் தேடி வருகிறார்கள்.

SOURCE:news18


 



Post a Comment

0 Comments