
பெகு: செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்சனிடம் தோல்வியை தழுவி இருந்தாலும், தமிழக வீரர் பிரக்ஞானந்தா ஏராளமான சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார்.
செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனிடம் தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வியை தழுவியுள்ளார். 18 வயதிலேயே உலகக்கோப்பை இறுதிபோட்டிக்கு முன்னேறியதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு பின் முன்னேறிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அதேபோல் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் குறைந்த வயதில் ஆடிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
அதுமட்டுமல்லாமல் உலகின் நம்பர் 2 வீரரான ஹிகாரு நகமுரா மற்றும் உலகின் 3 வீரரான ஃபேபியானோ கருவானா ஆகியோரையும் அடுத்தடுத்து வீழ்த்தி சாதனை படைத்தார். அதுமட்டுமல்லாமல் 2024ஆம் ஆண்டுக்கான கேண்டிடேட்ஸ் தொடருக்கு சென்னையின் செல்லப்பிள்ளை பிரக்ஞானந்தா தகுதிபெற்று சாதனை படைத்துள்ளார்.
கேண்டிடேட்ஸ் தொடர் என்பது உலகின் தலைசிறந்த வீரர்களால் விளையாடப்படும் தொடராகும். இந்தத் தொடருக்கு செஸ் உலகக்கோப்பைத் தொடரில் முதல் 3 இடங்களை பிடித்த வீரர்கள் நேரடியாக தகுதிபெறுவார்கள். அந்த வகையில் மேக்னஸ் கார்ல்சன், பிரக்ஞானந்தா மற்றும் ஃபேபியானோ கருவானா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்தத் தொடருக்கு மிக இள வயதில் தேர்வான இந்திய வீரர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளார்.
சர்வதேச அளவில் செஸ் கிராண்ட்மாஸ்டர்காளான மேக்னஸ் கார்ல்சன் மற்றும் செஸ் ஜாம்பவான் பாபி ஃபிஷர் ஆகியோருக்கு பின் தேர்வான 3வது இளம் வீரர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளார். இதனால் பிரக்ஞானந்தா அடைந்துள்ள தோல்வி தற்காலிகமானதே என்றும், வரும் ஆண்டுகளில் நிச்சயம் விஸ்வநாதன் ஆனந்தை போல் இந்திய செஸ் விளையாட்டின் முகமாக பிரக்ஞானந்தா மாறுவார் என்று பார்க்கப்படுகிறது.
Source:mykhel
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்

.gif)



0 Comments