Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -177


இன்றைய நாளில் திகைப்பூட்டும் சில நிகழ்வுகளை  செரோக்கி எதிர் கொள்ளப் போகிறான் என்று அவன் நினைக்கவில்லை.
செரோக்கியை அலுவலகத்தில் உட்கார வைத்துவிட்டு, தன் சக்தியூர்தியில் சென்று, தந்தையின் காரை எடுத்து வந்த இர்வின், செரோக்கியை  அதில் ஏற்றிக் கொண்டு பூங்காவன முற்சந்திக்கு விரைந்தான்.

பாதை ஒரமாகக் காரை  நிறுத்திவிட்டு இருவரும் பூங்காவுக்குள் நுழையும்போது, அங்கு சிரோமி ஏலவே வந்து நின்றிருந்தாள்.

இர்வின் செரோக்கியை அவளுக்கு அறிமுகப் படுத்திவிட்டு, செக்கொவ் பிறந்திருக்கும் தகவலை மேலதிகமாகச்  சொல்லி வைத்தான்.

வனத்துக்குள் செரோக்கி கிணற்றுத் தவளையாக  வாழ்ந்து வந்ததால், கறுத்து மெலிந்த அல்லது  கொழுத்துக் கறுத்த யுவதிகளை  மட்டுமே அவன் அங்கு பார்த்திருக்கின்றான். அதனால் நண்பனின் காதலி சிரோமி அவன்  கண்களுக்கு தேவதைபோலத் தோன்றினாள்.

அளவான உயரம், சிவந்த மேனி, வட்ட முகம், அகலக் கண்கள்,  சிறிய  மூக்கு, பால்வெள்ளை வரிசைப் பற்கள், மெல்லிய இளஞ்சிவப்பு உதடுகள்,  வாழைத் தண்டினை ஒத்த கழுத்து,  அளவான மார்பு, மெல்லிய இடுப்பு, டார்க் மெரூன் நெயில் பொலிஷ் பூசிய வெண்டை விரல்கள் கொண்ட அவளது ஆர்ப்பரித்த அழகுக்கு, அவள் அணிந்து வந்திருந்த ஆடை மெருகு சேர்த்தது.

குட்டைப் பாவாடையில் கட்டைச் சட்டை அணிந்து, தன் இடைமடிப்பைக் காட்டிநின்ற  அவள், தனது நண்பனுக்கு மிகப்பொருத்தமான சோடியாக இருப்பது கண்டு செரோக்கி மனமகிழ்ந்தான்.

(தொடரும்)


 



Post a Comment

0 Comments