
காதலுக்கு வயது ஒரு தடையே அல்ல என்று கூறுவார்கள். அதை உண்மை என நிரூபித்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த 93 வயது முதியவர். இவரது சுவாரஸ்யமான காதல் கதையை கேட்டு இணைய உலகமே பரவசமடைந்துள்ளது.
கிட்டத்தட்ட 96 படத்தில் வருவது போல காதலுக்காக காத்திருந்த இந்த முதியவரின் லவ் ஸ்டோரி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
விரைவில் இவர் தனது 83 வயது காதலியை மணமுடிக்க உள்ளார். ஒன்றல்ல, இரண்டல்ல 64 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற திருமண விருந்து ஒன்றில் தான் இவர்கள் இருவரும் முதன்முறையாக சந்தித்து கொண்டனர். இத்தனை வருடமும் திருமணம் செய்து கொள்ளாமல் தனது காதலிக்காக காத்திருந்துள்ளார் இந்த 93 வயது நபரின் கால வரம்பற்ற இவர்களின் தனித்துவ காதல் எப்படி மலர்ந்தது, அதன்பிறகு ஏற்பட்ட பிரிவு, இத்தனை வருடங்களுக்கு பிறகு திருமணம் என அனைத்தையும் விரிவாக தெரிந்து கொள்வோம், வாருங்கள்.
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாநிலத்தில் வசிக்கும் 93 வயதாகும் ஜோசப் போடென்சேனோவின் தங்கையின் திருமணம் 1959-ம் ஆண்டு நடைபெற்றது. அந்த திருமணத்தில் தான் தனது காதலி மேரியை சந்தித்தார் ஜோசப். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், முதல் பார்வையிலேயே ஜோசப்பின் அழகில் விழுந்துவிட்டார் மேரி. மெல்ல இவர்களுக்கிடையே காதல் மலர ஆரம்பித்தது. அடிக்கடி இருவரும் சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக் கொண்டனர். ஆனால் விரைவிலேயே இவர்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்டது. ஜோசப் ராணுவத்தில் சேர்ந்தார். நடனத்தில் ஆர்வம் கொண்ட மேரி, ரேடியோ சிட்டி இசை அரங்கில் நாட்டிய மங்கையாக பணியை தொடங்கினார்.
இதற்கிடையில், 1962-ம் ஆண்டு, மேரி இன்னொருவரை திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளுக்கு தாயானார். ஆச்சர்யம் என்னவென்றால் இவரது திருமணத்தில் ஜோசப்பும் கலந்து கொண்டார். அதன்பிறகு ஜோசப்பின் வாழ்க்கையிலும் பல பெண்கள் வந்து சென்றனர். ஆனால் மேரியின் காதலை அவரால் மறக்க முடியவில்லை. இதனால் யாரையும் திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லாமல் தனியாகவே வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற குடும்ப விருந்தொன்றில் ஜோசப்பும் மேரியும் சந்தித்துக் கொண்டனர். ஆனால் இந்த சந்திப்பு இவர்களுக்கிடையே மீண்டும் அந்த பழைய நெருக்கத்தை உருவாக்கியது. 9 வருடங்களுக்கு முன்பு மேரியின் கணவரும் இறந்திருந்தார். மீண்டும் இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. இருவருமே தனியே சந்தித்துக் கொண்டனர். இத்தனை வருடங்களாக தனியாகவே வாழ்ந்து வந்த நான், இப்படியே தனியாக இறக்க விரும்பவில்லை என்று கூறிய ஜோசப், மேரியை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார். இவர்கள் இருவருக்கும் வருகிற அக்டோபர் 15-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
இந்த வயதில் உனக்கு திருமணம் தேவையா என ஜோசப்பின் நண்பர்கள் அவரை கடிந்து கொண்டாலும், இது நல்ல முடிவுதான் என ஜோசப் கருதுகிறார். “எனக்கு இதில் எந்த வெட்கமும் இல்லை. மேரியை நான் உண்மையாக காதலித்தேன். அவரும் என்னை மனப்பூர்வமாக காதலிக்கிறார். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு வேறு என்ன வேண்டும்?” என கேட்டும் அவர் திருமணத்திற்கு தயாரிவருகிறார்.
Source:news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்

.gif)



0 Comments