Ticker

6/recent/ticker-posts

இந்தியாவில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு... எச்சரிக்கும் பொருளாதார வல்லுநர்கள்!


இந்தியாவில் ஏற்படும் உணவுபொருட்களின் தட்டுப்பாடு உலக சந்தைவரை எதிரொலிக்கும் என  பொருளாதார நிபுணா்கள் எச்சாிக்கின்றனா். இதனால் ஏற்படும் விலைவுகள் என்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். 
 
தக்காளி விலை ஒருவழியாக கட்டுக்குள் வந்ததை அடுத்து,  வெங்காயம் தன் பலத்தை காண்பிக்க துவங்கியுள்ளது. தக்காளி விலை ஜுன், ஜுலை மாதங்களில் உச்சத்தை எட்டிய நிலையில், அப்போதே வெங்காய விலை உயர்வு பற்றிய எச்சரிக்கைகள் தொடங்கிவிட்டன. அந்த எச்சரிக்கைகளுக்கு ஏற்ப வெங்காயத்தின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல ஜுலை மாதத்தில் சைவ உணவு வகைகளின் விலையும் மூன்றில் ஒரு பங்கு அதிகரித்ததாக கூறப்படுகிறது. இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனா்.

ஆண்டின் இறுதியில் தெலங்கானா உள்ளிட்ட சில மாநில தேர்தல்களும், 2024ல் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. அத்தகைய சூழலில்,பாஜக அரசிற்கு ஆட்சியை தக்கவைப்பதில் உணவுப்பொருட்களின் விலை ஏற்றம் நெருக்கடியான சூழலை உருவாக்கியுள்ளது.எனவே அரசு இதற்காக சில அதிரடியான முடிவுகள் நோக்கியும் நகர்ந்து வருகிறது.

ஏற்கனவே விலை உயர்வை கட்டுப்படுத்த 2022-ம் ஆண்டு கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதை தெடர்ந்து பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது.உலகின் பல்வேறு நாடுகளில் அரிசி முக்கிய உணவாக உள்ள நிலையில் முக்கிய ஏற்றுமதியாளரான இந்தியாவின் முடிவு பல்வேறு நாடுகளை குறிப்பாக தாய்லாந்து போன்ற நாடுகளை வெகுவாக பாதித்துள்ளது.

இந்நிலையில் தற்போது வெங்காய ஏற்றுமதி வரியை 40 சதவீதம் உயர்த்தியுள்ளது மத்திய நிதித்துறை. இதனால் வெங்காய ஏற்றுமதி குறைந்துள்ளதால் உலகின் பல்வேறு நாடுகளில் வெங்காயத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் வரும் நாட்களில் சர்க்கரை உற்பத்தி குறைவாக இருக்கும்பட்சத்தில், சர்க்கரை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதால் உலக நாடுகள் மேலும் பாதிக்கக் கூடும் என பொருளாதார நிபுணகள் தொிவிக்கின்றனா்.

உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உலகச் சந்தையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என உலக உணவு ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனா். அரிசி, சர்க்கரை மற்றும் வெங்காயம் போன்றவற்றை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா பெரும் பங்கு வகிக்கிறது. இந்த பெருட்களின் தேவையை 40 சதவீதம் இந்தியாவே ஈடு செய்து வருகிறது. இந்நிலையில், இத்தகைய முடிவு என்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று உலக நாடுகள் அச்சப்பட துவங்கியுள்ளன.

ஆனால் இந்திய அரசை பொறுத்தவரையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொள்ளவும், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க வேண்டிய முனைப்பிலும் இருப்பதால், உள்நாட்டு விலையை கட்டுப்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது

அடுத்துவரும் காலங்களில் சிறிதளவு விலை உயர்வை அரசால் கட்டுப்படுத்த முடியும் எனவும், ஏற்றுமதி பொருட்களை கட்டுப்படுத்துவதை தவிர அரசிற்கு வேறு வழிகளும் இல்லை எனவும் நிபுணா்கள் கூறுகின்றனா்

Source:news18


 



Post a Comment

0 Comments