Ticker

6/recent/ticker-posts

கம்பீர் செய்த வெட்ககேடான செயல்? கோலி! கோலி என கத்திய ரசிகர்கள் முன் கோவப்பட்டாரா? உண்மை என்ன?


கேண்டி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கவுதம் கம்பீர் செய்த காரியம் ஒன்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய அணி நேபாளத்தை இலங்கையில் உள்ள கேண்டி கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொண்டது.
 
இந்தப் போட்டிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் வர்ணனையாளராக செயல்பட்டார். கௌதம் கம்பிருக்கும் நட்சத்திர வீரர்களுக்கும் எப்போதுமே ஆகாது.

உலகக் கோப்பை இந்தியா வென்றதற்கு தோனியை மட்டும் ஏன் பாராட்டுகிறீர்கள் என்று கௌதம் கம்பீர் எப்போதும் வன்மத்தை கக்கி வருவதுண்டு. அதேபோன்று தற்போது இந்திய அணியில் நட்சத்திர வீரராக இருக்கும் விராட் கோலியை மட்டும் கௌதம் கம்பீர் தனியாக குறி வைத்து விமர்சித்து வருவார்.இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு கம்பீர் மென்டராக பணியாற்றி வந்தார்.

அப்போது ஆர் சி பி அணியில் விராட் கோலியும் லக்னோ அணியின் கௌதம் கம்பீரும் மோதிக்கொண்டனர். அதன் பிறகு கம்பீர் எப்போதெல்லாம் ரசிகர்கள் பார்க்கிறார்களோ அப்போதெல்லாம் கோலி, கோலி என்று கத்தி அவரை வெறுப்பேற்றி வருவது வழக்கமாகும். இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி நம்பர் மூன்றாவது இடத்தில் விளையாடுவதற்கு எதிராக கம்பீர் பேசி வந்தார்.
விராட் கோலியை நான்காவது இடத்தில் விளையாட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரல் ஆனது. கம்பீர் பார்வையாளர்கள் மாடத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் கோலி கோலி என கத்தி அவரை வெறுப்பேற்றினர். இதனால் கடுப்பான கம்பீர் தனது நடு விரலை உயர்த்தி ரசிகர்களுக்கு காட்டினார்.

இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சொந்த நாட்டு ரசிகர்களின் பெயரை சொந்த ரசிகர்கள் கத்தியதை கூட பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு கம்பீர் அநாகரிகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கம்பீர் கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல் தற்போது பாஜக நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். இந்த நிலையில் அறுவருக்கத் தக்கும் வகையில் நடுவிரலை உயர்த்தி இந்திய ரசிகர்களை கம்பீர் அவமானப்படுத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள கம்பீர், இந்தியாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் தான் தாம் இவ்வாறு செய்தேன் என்று கூறியுள்ளார். இதனால் கம்பீரின் கூற்றுப் படி இந்த வீடியோவில் எடிட்டிங் செய்யப்பட்டு இருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Source:mykhel


 



Post a Comment

0 Comments