நலம் வாழ -மருத்துவப் பகுதி-38

நலம் வாழ -மருத்துவப் பகுதி-38


தொடர்ச்சியாக வேட்டை மின்னிதழில் சர்க்கரை நோய் குறித்த ஒரு விரிவான அலசலை ஒவ்வொரு வாரமும் நாம் பார்த்து வருகின்றோம் .


பொருளை குறித்த தெளிவு அல்லது ஒரு நோயைக் குறித்த தெளிவு தேவை எனில் அதைப் பற்றியான புரிதல் இருந்தால் மட்டுமே அதை பற்றிய பயம் இருக்காது.

எவ்வாறு இருட்டில் எதுவும் தெரியாமல் இருக்கும் பொழுது பயம் தோன்றுகிறதோ? அவ்விடத்தில் ஒரு வெளிச்சம் இருந்தால் பயத்தைப் போக்கிவிடும். அவ்வாறுதான் நமது பதிவு பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பொழுது நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற சர்க்கரை நோய் எனும் நீரழிவு நோய் பற்றிய தொகுப்பை பார்த்து வருகின்றோம்.

ஒரு சிறிய தெளிவிற்காக

நாம் நமது உடலை தாக்கக்கூடிய கிருமிகள் அதாவது பாக்டீரியாஸ் பங்கஸ் மேலும் நோய் தொற்றை ஏற்படுத்தக்கூடிய கிருமிகளை ஒழிக்க பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் எங்கு கழிவுகள் அதிகமாக இருக்கின்றதோ அங்குதான் நோய் தொற்று ஏற்படும் எவ்வாறு எனில் தூய்மையாக இருக்கக்கூடிய இடத்தில் எவ்வாறு ஈக்களும் கொசுக்களும் மற்ற கிருமிகளும்  அந்த இடத்தில் வசிக்க  வாய்ப்பில்லை.
ஆனால் அசுத்தமான கழிவுகள் நிறைந்த இடத்தில் அனைத்து வகையான பூச்சிகளும் ,கொசுக்களும், ஈக்களும் வசிக்க ஏற்ற இடமாக இருக்கிறது. எனவே இதை நமது உடலில் சிறிது பொருத்தி பார்க்கலாம்.

நமது உடலில் நச்சுக்கள் கலந்த ரத்தத்தில் பாக்டீரியாக்களும் நோய் தொற்றும் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? அல்லது சுத்தமான ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தில் நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதா?

சிறிது மூளைக்கு வேலை கொடுக்கலாமா?
    
அதனை வேட்டை வாசகர்கள் தான் கூற வேண்டும்!

நமது ரத்தத்தை தூய்மைப்படுத்த எத்தனிக்க வேண்டுமே தவிர, கொசுக்களை ஒழிக்க சாக்கடையை அகற்ற வேண்டுமே தவிர சாக்கடையை நிறைய விட்டு விட்டு பூச்சி மருந்து அடிப்பதல்ல அறிவார்ந்த செயல்.
  
சர்க்கரை நோய்க்கு வருவோம்
சர்க்கரை நோய் என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது மண்ணீரலும் கணையமும் தான்.

மண்ணீரலும் கணையமும் எங்கு அமைந்துள்ளது என்பதை பார்க்கலாம் மண்ணீரல் வயிற்று அறையில் இடது பகுதியில் இரைப்பைக்கு இருதயத்திற்கும் அருகில் அமைந்துள்ளது இந்த உறுப்பு ஒரு கைப்பிடி அளவு உள்ளது இந்த உறுப்பு அதிகமான நாளங்கள்  உள்ள உறுப்பாகும்.

மண்ணீரலின்மிக முக்கியமான ஒரு பணி இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதாகும்.

இன்னும் ஒரு முக்கியமான பணி நிணநீர் உற்பத்தியில்  முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் ரத்தத்தில் ஊடுருவும் கிருமிகளை எதிர்த்து போராடுகிறது. எவ்வாறெனில் மண்ணீரலில் உள்ள வெள்ளை ரத்தஅணுக்களின் மூலமாக.

இது ரத்த அணுக்களின் அளவையும் கட்டுப்படுத்துகிறது ரத்த அணுக்கள் (வெள்ளை ரத்த அணுக்கள், சிவப்பு ரத்த அணுக்கள், மற்றும் ரத்த தட்டை செல்கள் ) அளவுகளை கட்டுப்படுத்துகிறது. 

அடுத்து வரும் தொடர்களில் மண்ணீரலும் அதனைச் சார்ந்த ஒட்டுருப்பான கணையத்தை பற்றியும் பல தகவல்களை நாம் பார்க்கலாம்

மேலும் பல தகவல்களுடன் உங்களுக்காக உங்களுடன் அடுத்த வாரம்  சந்திக்க உங்களுடன் உங்களுக்காக.
டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu).


 
 


 



Post a Comment

Previous Post Next Post