
உலகம் என்னதான் டிஜிட்டல் உலகத்தை நோக்கி தினம்தோறும் நகர்ந்து வந்தாலும், சில ஆச்சர்யமூட்டும் வினோதமான சடங்குகள் உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. அப்படி ஒரு நிகழ்வு தான் பல்கேரியாவில் நடந்து வருகின்றது.
பல்கேரியாவின் ஸ்டாரா ஜாகோராவில், ஒவ்வொரு வசந்த காலத்திலும் சர்ச்சைக்குரிய "மணமகள் சந்தை" ஏற்பாடு செய்யப்படுகிறது. அங்கு கன்னிகழியாமல் இருக்கும் இளம் பெண்கள், அவர்களை ஏலம் எடுக்க வருபவர்கள் முன்பாக முன் அணிவகுத்துச் செல்வார்களாம். உள்ளூரில் இந்த சடங்கை "ஜிப்சி மணப்பெண் சந்தை" என்று அழைக்கின்றனர்.
பெண்கள் "நீண்ட வெல்வெட் பாவாடைகள் மற்றும் பிரகாசமான வண்ணத் தலைக்கவசங்களுடன்" தங்க நகைகளை கழுத்து, விரல்கள், காதுகள் போன்ற இடங்களில் ஜொலிக்கவிட்டு நடைபோடுவார்களாம். ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ நோன்பின் முதல் சனிக்கிழமை அன்று தான் இந்த சந்தை நடத்தப்படுகிறது. மணமகளின் விலை குறித்து அவர்கள் பல விவாதங்களில் ஈடுபடுவார்களாம். டேட்டிங் மற்றும் பிற சமூகங்களுடன் திருமணம் செய்வதை இவர்கள் தடை செய்து வைத்துள்ளனர்.
பல்கேரிய அகாடமி ஆஃப் சயின்ஸின் இனவியலாளர் வெல்சோ க்ருஸ்டெவ் இந்த சடங்கு குறித்து பேசும்போது, "ஒரு மனிதன் அந்த சந்தையில் மனைவியை வாங்கவில்லை, மாறாக அவளுடைய கன்னித்தன்மையை வாங்குகிறான்" என்று கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, மணப்பெண்ணின் அந்த புதிய குடும்பம், அதிக பணம் கொடுத்து அந்த பெண்ணை வாங்குவதால் அப்பெண்ணை நடத்துவார்கள் என்கிறார்.
Hristos Georgiev, என்ற 18 வயது இளைஞர், 18 வயதான Donka Dimitrova என்ற பெண்ணின் தந்தையுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பேரம் பேசுகின்றார். அது தோராயமாக $7,500 முதல் $11,300 வரை அந்த பேரம் போகும். இது "சராசரி பல்கேரியரின் ஊதியத்தில் ஒரு வருடத்தின் மதிப்பை விட அதிகம்" என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்தையில் பெண்களை ஏலத்தில் எடுக்க, வருடக்கணக்கில் இளைஞர்கள் உழைத்து காசு சேமிப்பதும் உண்டு.
Source:asianetnews
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்

.gif)



0 Comments