Ticker

6/recent/ticker-posts

"தைவான் சீனாவின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

தைவான் சீனாவின் ஒரு பகுதி என்பதை அங்கீகரிக்கும்படி பிலிப்பீன்ஸிடம் சீனா கேட்டுக்கொண்டிருக்கிறது.

தைவானைப் பற்றித் தவறாகப் பேசவோ நடக்கவோ வேண்டாம் என்று பெய்ச்சிங் கூறியது.

பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸைப் (Ferdinand Marcos) பற்றி சீனா மோசமாகப் பேசியதாக மணிலாவின் தற்காப்பு அமைச்சர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அதற்குப் பதில் அளித்த பெய்ச்சிங் அவ்வாறு சொன்னது.

முன்னதாகத் தைவானின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற திரு. வில்லியம் லாய்க்குத் திரு. மார்க்கோஸ் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

தைவான் பற்றி எவரும் சினமூட்டும் வகையில் நடந்துகொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சீனா கூறியது.

தென்சீனக் கடல் சர்ச்சைகளைக் கையாள்வதைப் பற்றி பெய்ச்சிங்கும் மணிலாவும் பேச்சு நடத்தும் வேளையில் புதிய குற்றச்சாட்டுகள் வந்தன.

seithi


 



Post a Comment

0 Comments