Ticker

6/recent/ticker-posts

1000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்த பேடிஎம்.. AI டெக்னாலஜியால் பாதிப்பு என தகவல்..!

பேடிஎம் நிறுவனத்தில் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் AI டெக்னாலஜி தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

கடந்த சில ஆண்டுகளாக AI டெக்னாலஜி உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்து வருகிறது. ஏற்கனவே ஏராளமானவர்கள் AI டெக்னாலஜியால் வேலை இழந்த நிலையில் தற்போது பேடிஎம் நிறுவனம் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிறுவனத்தின் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை அதிகரித்து பெருமளவு பயனளித்துள்ளதால் ஊழியர்களின் எண்ணிக்கை சற்று குறைக்கப்பட்டுள்ளதாக பேடிஎம் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்  
பேடிஎம் போலவே  இன்னும் சில நிறுவனங்களும் அதிகம் பயன்படுத்தி மனித ஊழியர்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

webdunia


 



Post a Comment

0 Comments