தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி: அரச வைத்தியசாலைகளில் குவியும் நோயாளிகள்

தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி: அரச வைத்தியசாலைகளில் குவியும் நோயாளிகள்

கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் மருந்துகளின் விலை அதிகரிப்பு காரணமாக அரச வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளமையே இந்த நிலைமைக்கான காரணம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமில்

பொருளாதார நெருக்கடி தீவிரமடைவதற்கு முன்னர், இலங்கையில் 50 வீதமான நோயாளிகள் பொது வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுக்கும் (OPD) மேலும் 50 வீதமானவர்கள் தனியார் வைத்தியசாலைகள் மற்றும் தனியார் மருத்துவ நிலையங்களுக்கு சென்றதாகவும் கூறியுள்ளார்.

இருப்பினும் தற்போது மருந்துகளின் விலை அதிகரிப்பு காரணமாக அரச வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சில நோயாளிகள் மேம்பட்ட சிகிச்சை முறைகளை நாடுவதும்,வைத்திய பரிந்துரைகள் இன்றி சட்டவிரோதமாக மருந்துகளை உட்கொள்வதும் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே நோயாளிகளுக்கு அத்தியாவசியமான மற்றும் அடிக்கடி பயன்படுத்தப்படும் மருந்துகளின் பட்டியலை உடனடியாக தயாரித்து அவற்றின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பிரேரணை கடந்த வருடம் ஜனாதிபதி மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

tamilwin



 



Post a Comment

Previous Post Next Post