Ticker

6/recent/ticker-posts

மீண்டும் மொட்டுக்கட்சியின் தலைவரானார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் அதிபரும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச மீண்டும் அக்கட்சியின் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

காமினி லொக்குகே இதனை முன்மொழிந்திருந்த நிலையில், ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ அதனை வழிமொழிந்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பொது மாநாடு இன்று (15) நடைபெறுகின்ற நிலையிலேயே மகிந்த ராஜபக்ச மீண்டும் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் பெரமுனவின் வேட்பாளராக களமிறங்கவுள்ளவர் தொடர்பில் இன்று அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ibctamil


 



Post a Comment

0 Comments