Ticker

6/recent/ticker-posts

100 கிராம் திராட்சையை 9ஆயிரத்துக்கு வாங்கியும் சாப்பிடாத பணக்கார பெண்.. ஆச்சரியமூட்டும் காரணம்!

பெரும்பாலும் மக்கள் பலர் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவது உண்டு. இன்னும் சொல்லப்போனால், அவர்கள் பயன்படுத்த முடியாத பொருட்களை கூட வாங்க விரும்புவார்கள். அந்தவகையில், தற்போது ஒரு பெண் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளார். அதுகுறித்து இங்கு பார்க்கலாம்..

பொதுவாக திராட்சை கிலோ ரூ.100 முதல் 200 வரை கிடைக்கும். ஆனால் உலகின் விலை உயர்ந்த திராட்சை பற்றி தெரியுமா? உண்மையில், உலகின் மிக விலையுயர்ந்த திராட்சை ஜப்பானில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ரூபி ரோமன் திராட்சை ஜப்பான் என்றும் அழைக்கப்படுகிறது.

இதற்கிடையில், துபாயில் வசிக்கும் பெண் ஒருவர் 92 பவுண்டுகள் அதாவது தோராயமாக 9 ஆயிரம் ரூபாய்க்கு திராட்சை கொத்து வாங்கியுள்ளார். ஆனால் அவர் அதை சாப்பிடவில்லை. இதற்கு அந்த பெண் கூறிய காரணத்தை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். 

அந்த பெண் ஏன் இந்த முடிவை எடுத்தார் தெரியுமா?

துபாயில் வசிக்கும் பெரும் பணக்கார பெண்ணின் பெயர் தலீலா லாரிபி என்று கூறப்படுகிறது. தலிலா லாரிபி என்ற பெண் தனது TikTok கணக்கிலிருந்து ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் திராட்சை கொத்துகளுடன் காணப்படுகிறார். இந்த வீடியோவில், உலகின் மிக விலையுயர்ந்த திராட்சையை 428 UAE திர்ஹாம்கள் கொடுத்து வாங்கியதாக கூறினார். ஆனால் அவர் அந்த பழத்தை சாப்பிட விரும்பவில்லை என்று வீடியோவில் கூறியுள்ளார்.

இதற்குப் பிறகு அந்தப் பெண் மற்றொரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர், 'என்னைப் பின்பற்றுபவர்களுக்குச் சொல்ல இந்த திராட்சைகளில் ஒன்றை நான் சாப்பிட்டேன். இந்த திராட்சை உண்மையில் இவ்வளவு விலை மதிப்புடையதா என்பதை அறிய விரும்பினேன். இந்த திராட்சையில் ஒரு விசித்திரமான வாசனையை என்னால் உணர முடிந்தது. பழத்தை பாதியாக வெட்டிய பிறகும், முழுதாக சாப்பிடலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன், ஆனால் நம்புங்கள், அதன் சுவை ஆச்சரியமாக இருந்தது'. என்றார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

asianetnews


 



Post a Comment

0 Comments