Ticker

6/recent/ticker-posts

16-ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை

(நபி வழியில் தொழுகை)



வேறு ஸூறா ஓதுதல் :

பர்ழ் தொழுகையிலும் ஸுன்னத்தான தொழுகையிலும் ஸூறதுல் பாதிஹா ஓதிய பின் வேறு ஸூறாக்களை அல்லது வசனங்களை ஓதுவது ஸுன்னத்தாகும்.

1. நபியவர்கள் ஸூறா பாதிஹா ஓதி முடித்த பின் சில வேளைகளில் நீண்ட ஸூறாக்களை  ஓதுவார்கள். மஃமூம்கள் மத்தியில் நோயாளிகள் , பிரயாணிகள் இருந்தால் சிறிய ஸூறாக்களை ஓதி சுருக்கி கொள்வார்கள். நபிகளாரின் காலத்தில் பெண்களும் பள்ளிவாசலுக்கு வந்து ஐவேளை தொழுகை மற்றும் ஜும்ஆ தொழுகைகளில் கலந்துகொள்வார்கள். அவர்கள் தம்முடன் சுமந்து வந்த குழந்தைகளின் அழுகுரலை நபியவர்கள் கேட்டால் சிறிய ஸூராக்களை ஓதி சுருக்கிகொள்வார்கள். (ஹதீஸின் கருத்து – புஹாரி , முஸ்லிம் , அஹ்மத்).

2.சில வேளைகளில் ஏதாவது ஒரு ஸூறாவை இரண்டாக பிரித்து இரு றக்அத்துகளில் ஓதுவார்கள் (அஹ்மத்).

3.சில நேரங்களில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட ஸூராக்களைக் கூட ஒரே றக்அத்தில் ஓதுவார்கள் (முஸ்லிம்).

முந்திய இரண்டு றக்அத்துகளில் மட்டும் தான் பாதிஹாவுக்குப் பின் வேறு ஸூறாக்களை ஓதுவதா? அல்லது மூன்றாவது , நான்காவது றக்அத்துகளிலும் வேறு ஸூரா ஓத முடியுமா?

முந்திய இரண்டு றக்அத்துகளிலும் பாதிஹாவுக்கு பின் வேறு ஸூராக்கள் ஓதுவதே நபிகளாரின் பெரும்பாலான நடைமுறை. சில வேளைகளில் பிந்திய இரு ரக்அத்துகளிலும் வேறு ஸூராக்கள்

ஓதியிருக்கிறார்கள். அதனால் மூன்றாவது , நான்காவது ரக்அத்துகளில் வேறு ஸூரா ஓத முடியும்.பின்வரும் ஹதீஸ் இதற்கு ஆதாரம் :

அபூ ஸஈதினில் குத்ரீ (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள் : நபியவர்கள் ளுஹர் தொழுகையின் முந்திய இரண்டு ரக்அத்துகளிலும் 30 வசனங்கள் அளவுக்கு ஓதினார்கள். பிந்திய இரு ரக்அத்துகளிலும் 15 வசனங்கள் அளவுக்கு ஓதினார்கள். அஸர் தொழுகையில் முந்திய இரு றக்அத்துகளிலும் 15 வசனங்கள் அளவுக்கு ஓதினார்கள். பிந்திய இரு ரக்அத்துகளிலும் அதன் அரைவாசி அளவுக்கு வசனங்களை ஓதினார்கள் (முஸ்லிம்).

(தொடரும்)

ARM. ரிஸ்வான் (ஷர்க்கி) 


 



Post a Comment

0 Comments