Ticker

6/recent/ticker-posts

Ad Code

செயற்கை நுண்ணறிவு உலகளவில் 40 வீதமான தொழில் வாய்ப்புக்களை பாதிக்கும்: IMF அறிக்கை


ஆர்ட்டிபிஸல் இன்டலிஜன்ட்ஸ் என்ற செயற்கை நுண்ணறிவு கிட்டத்தட்ட 40 வீதமான உலகளாவிய தொழில் வாய்ப்புக்களை பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பகுப்பாய்வின்படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது மேம்பட்ட பொருளாதாரங்கள் விளைவுகளில் செயற்கை நுண்ணறிவு அதிக பங்கைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் பெரும்பாலான சூழ்நிலைகளில், செயற்கை நுண்ணறிவு ஒட்டுமொத்த சமத்துவமின்மையை அதிகரிக்கக்கூடும்.

எனவே தொழில்நுட்பம், சமூக பதற்றங்களை மேலும் தீவிரப்படுத்துவதைத் தடுக்க கொள்கை வகுப்பாளர்களின் செயல்திறன்மிக்க நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவா அழைப்பு விடுத்துள்ளார்.

ஜோர்ஜீவாவின் கருத்துக்கள் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் நடந்த விவாதங்களுடன் ஒத்துப்போகின்றன, அங்கு உலகளாவிய வணிகம் மற்றும் அரசியல் தலைவர்கள் செயற்கை நுண்ணறிவைப் பற்றி விவாதித்துள்ளனர்.

சில நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவில் அதிக முதலீடு செய்வதன் மூலம் ஊழியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன.

செயற்கை நுண்ணறிவு சட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியிருந்தாலும், இந்த விடயத்தில் அமெரிக்கா தனது கூட்டாட்சி ஒழுங்குமுறை நிலைப்பாட்டை இன்னும் பரிசீலித்து வருகிறது.

இந்தநிலையில் செயற்கை நுண்ணறிவு வழங்கும் வாய்ப்புகள், குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கு உதவவேணடும் என்பதன் முக்கியத்துவத்தை கிறிஸ்டினா வலியுறுத்தியுள்ளார்.

tamilwin


 



Post a Comment

0 Comments