
சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு 10 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற பல்வேறு முறைப்பாடுகளை தொடர்ந்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையின் கூற்றுபடி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களைத் தவிர, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்த 10 உறுப்பினர்களின் சொத்துக்கள் குறித்தும் தனித்தனி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட கண்டுபிடிப்புகள் உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, சட்டவிரோதமாகச் சம்பாதித்த சொத்துக்களை, பணமோசடி தடுப்புச் சட்டம் மற்றும் தொடர்புடைய சட்டத்தின் விதிகளின்படி பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ibctamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments