Ticker

6/recent/ticker-posts

5 வயது மகனை தவிக்கவிட்ட சோயப் மாலிக்.. நடிகையுடன் 3வது திருமணம்.. தில்லாக நிற்கும் சானியா மிர்சா

ஹைதராபாத் : இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் கணவரான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் மூன்றாவது திருமணம் செய்துள்ளார். சானியாவை அவர் விவாகரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது. சோயப் மாலிக் - சானியா மிர்சாவுக்கு 5 வயதில் இஸ்ஹான் மிர்சா மாலிக் என்று ஒரு மகன் இருக்கிறார். சானியாவுடன் கடந்த சில ஆண்டுகளாக பிரிவில் இருந்த போதும் மகனை சந்திக்கவாவது அவ்வப்போது வந்து சென்றார் சோயப் மாலிக்.

ஆனால், இப்போது தன் மகனையும் தவிக்கவிட்டு அவர் பாகிஸ்தான் நடிகையான சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். மகனை தற்போது சானியா மிர்சா பார்த்துக் கொள்வார் என கூறப்படுகிறது. தனி ஆளாக மகனை வளர்க்க அவர் ஆயத்தமாகி விட்டார். சோயப் மாலிக் தான் இந்த திருமண உறவில் இருந்து விலகிச் சென்றதாக தெரிகிறது.

சோயப் மாலிக் தற்போது திருமணம் செய்துள்ள நடிகை சனா ஜாவேத்துக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. சோயப் மாலிக்கின் முதல் மனைவி பெயர் ஆயிஷா சித்திக்கி. அவருடன் 2002இல் திருமணம் செய்த சோயப் மாலிக், பின்னர் அவரை விவாகரத்து செய்தார். 

அதன் பின் இரண்டாவதாக சானியா மிர்சாவை திருமணம் செய்தார். அப்போது இந்தியா - பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டது. சானியா பாகிஸ்தானுக்கு சென்று விடுவார் என்றெல்லாம் கூட பேசப்பட்டது. ஆனால், சானியா தான் இந்திய குடிமகள் என உரக்கக் கூறி இந்தியாவிலேயே தங்கினார்.

எனினும், சானியா மிர்சா டென்னிஸ் விளையாட்டில் தீவிரமாக இருந்தார். மறுபுறம் சோயப் மாலிக் உலகம் முழுவதும் நடந்த பல்வேறு டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வந்தார். கடந்த ஆண்டு டென்னிஸில் இருந்து சானியா மிர்சா ஓய்வு பெற்ற பின் அவருக்கு நிறைய நேரம் இருந்தது. ஆனாலும், சோயப் மாலிக் விலகியே இருந்த நிலையில் தற்போது அவர்கள் திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளது. இந்த விவகாரம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு நாட்டிலும் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

mykhel


 



Post a Comment

0 Comments