
அமெரிக்காவில் கடந்த வாரம் முழுதும் வீசிய பனிப்புயலுக்குக் குறைந்தது 90 பேர் பலியாயினர்.

டென்னசீ (Tennessee), ஆரிகன் (Oregon) உள்ளிட்ட மாநிலங்களில் அந்த மரணங்கள் பதிவாகின. கடுமையான பனிப்புயல் காரணமாக அந்த மாநிலங்களில் நெருக்கடிநிலை இன்னமும் நடப்பில் உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரமின்றித் தவிப்பதாக BBC செய்தி கூறுகிறது. இந்த வாரமும் பனிப்புயல் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டென்னசீயில் தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குழாய்கள் உடைந்துவிட்டதால் அந்த மாநிலத்தில் வசிக்கும் சுமார் 400,000 குடியிருப்பாளர்கள் தண்ணீரைக் கொதிக்கவைத்துப் பயன்படுத்தும் சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர். குடிக்க, பல் துலக்க, பாத்திரங்களைக் கழுவ, உணவு சமைக்க என அனைத்துக்கும் கொதிக்கவைத்த நீர் பயன்படுத்தப்படுகிறது.
சில உணவகங்களும் உணவு விடுதிகளும் போத்தல் தண்ணீரைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றுகின்றன. வேறுவழியில்லாத உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. அல்லது உணவுமுறையில் மாற்றம் செய்து வழங்குகின்றன. மழையால் அமெரிக்காவின் மத்திய, வடகிழக்குப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
seithi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments