
தேசிய மக்கள் சக்தியின் கண்டி தொகுதி மாநாடு நேற்று (13) கண்டியில் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
“குருணாகலில் ஜோன்ஸ்டன், கண்டியில் மகிந்தானந்த, இரத்தினபுரியில் சொக்கா மல்லி, களுத்துறையில் ரோஹித அபேகுணவர்தன, கம்பஹாவில் பிரசன்ன ரணதுங்கவும், அநுராதபுரத்தில் எஸ்.எம்.சந்திரசேன போன்றோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அதிகரித்த குற்றச்செயல்கள்
நாம் சரியாக அவதானித்தால் கடந்த நாடாளுமன்றத்திற்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் யார் என்பது புலப்படும். பிரசன்ன ரணதுங்க கப்பம் வாங்கியமைக்காக நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டவர்.
இவர்கள் பலவந்தமாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தவர்கள் அல்லர். நாட்டு மக்களின் வாக்குகளாலேயே இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். எனவே, பொருளாதாரத்தில் மாத்திரமா சீரழிவு இருக்கிறது?
எமது நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துவிட்டன. மனித சிந்தனைகள் சீரழிந்திருக்கின்றன. எனவே, எம் கண்ணெதிரே இருப்பது ஓர் அழிவடைந்த தேசமாகும். நாம் ஒரு தீர்வுகட்டமான திருப்புமுனைக்கு வந்துள்ளோம்.
இந்த ஆட்சியாளர்களினால் இன்று நாட்டில் அரிசி, எரிபொருள் மற்றும் ஔடதங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு தோன்றியுள்ளது. கடன் செலுத்தமுடியாத நாடாக மாறியிருக்கிறோம். வாழ முடியாத ஒரு நாடாக இலங்கை மாற்றப்பட்டுள்ளது.
மக்களின் கையில் தான் முடிவு
சட்டம் நடைமுறைப்படுத்தப்படாத, ஒழுக்கமில்லாத, போதைவஸ்துகள் நிரம்பிய மற்றும் குற்றச்செயல்கள் மலிந்த ஒரு நாடே இன்றைய பெறுபேறாக இருக்கிறது. இதே பயணப்பாதையில் சென்று நாம் செத்து மடியப் போகிறோமா? இல்லையென்றால் ஒன்றாக எழுச்சிபெறப் போகின்றோமா? மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
எம்மிடம் சுலபமான வழியும் இருக்கிறது. அதாவது, எவ்வித பிரச்சினையும் இன்றி எல்லோரும் இதே அழிவுப் பாதையில் சுடுகாட்டை நோக்கி பயணிக்கவும் முடியும். இல்லையென்றால், நாம் திடசங்கற்பத்துடன், ஒன்றாக எழுச்சி பெற வேண்டும்.
சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை நிராகரித்து நாம் எழுச்சி பெறுவோம் என்ற பிரேரணையை முன்வைக்கவே கண்டி நகரில் நாம் அனைவரும் திரண்டிருக்கிறோம். இந்த ஆட்சியாளர்களிடம் இருந்து இதைவிட எவ்வாறன மீதி இருக்கை கிடைக்கப்போகிறது.
எந்த துறையில் நாம் வென்றிருக்கிறோம், எந்த துறையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. எந்த துறையை பற்றிய எதிர்பார்ப்பு இருக்கிறது என்று எவராவது கூற முயுமா? இப்பொழுதும் நீங்கள் விழித்தெழாவிட்டால் இனி ஒருபோதுமே எழுச்சிபெற மாட்டீர்கள்.“ என தெரிவித்தார்.
ibctamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments