Ticker

6/recent/ticker-posts

விமான இருக்கைக்கு மேல் ஏதோ நகர்கிறது...பாம்பா?


விமானத்தில் பயணம்...

இருக்கைக்கு மேல் ஏதோ நகர்வது போலத் தோன்றியது...

ஒரு பை தான் நகர்ந்திருக்கும்' என்று எண்ணி மேலே பார்த்தால்...ஒரு பாம்பு தான் நகர்ந்தது!

தாய்லந்தின் பேங்காக் நகரிலிருந்து புக்கெட்டிற்கு AirAsia விமானத்தில் சென்ற ஒருவருடைய அனுபவம் அது.

Tiktok-இல் பகிர்ந்துகொள்ளப்பட்ட காணொளியில் சற்று நீளமான மெல்லிய பாம்பு தென்படுகிறது.

பயணிகள் பலர் பீதியடைவதையும் இருக்கைகளை விட்டு வெளியேறுவதையும் பார்க்கமுடிகிறது.

விமானச் சிப்பந்தி ஒருவர் பாம்பைப் பிளாஸ்டிக் போத்தலுக்குள் வைக்க முனைகிறார். பாம்பு மீண்டும் மீண்டும் வெளியாகிறது.

சிப்பந்தி பாம்பை ஒரு பையில் வைக்கிறார்.

பாம்பு எப்படி விமானத்திற்குள் வந்தது என்று இணையவாசிகள் பலர் வினவினர்.

பயண உடைமைகளுக்குள் வைக்கப்பட்டிருந்தால், அது ஏன் குடிநுழைவுச் சோதனைகளில் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் சிலர் கேட்டனர்.

seithi


 



Post a Comment

0 Comments