Ticker

6/recent/ticker-posts

தன்னைக் கடித்த எலியைக் கடித்துக் கொன்ற மாணவி!

தன் விரலைக் கடித்த சுண்டெலியைப் பழிதீர்க்கும் வகையில், இளம்பெண் ஒருவர் அதனையே கடித்துக் கொன்றுவிட்டார்.

இச்சம்பவம் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி நிகழ்ந்ததாக ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட்’ குறிப்பிட்டுள்ளது.

பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த அந்த 18 வயது மாணவியின் விரலைச் சுண்டெலி ஒன்று கடித்துவிட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அம்மாணவி, தன் கைகளால் அச்சுண்டெலியைப் பிடித்து, அதன் தலையைக் கடித்தார். இதில் அவரது இரு பற்களின் தடம் அந்த எலிமீது பதிந்துவிட்டது.

சிறிது நேரத்தில் அச்சுண்டெலி இறந்துவிட்டது. அம்மாணவி தன் கைகளால் சுண்டெலியை இறுக்கிப் பிடித்ததால் அது மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இதனிடையே, பலமாகக் கடித்ததால் மாணவியின் உதட்டிலும் காயமேற்பட்டது. இதனையடுத்து, அவர் உரிய சிகிச்சை பெற்று, இப்போது நலமுடன் உள்ளார்.

இந்தச் சம்பவத்திற்காக அம்மாணவி வருந்துவதாகவும் சிகிச்சை பெற்றபோது தன் முகட்டைக் காட்ட வெட்கப்பட்டதாகவும் அவருடைய அறைத்தோழி கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்த செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது.

tamilmurasu


 



Post a Comment

0 Comments