
இதன்படி மாலைதீவுக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்ப வேண்டும் என சீனாவுக்கு மாலைதீவு அதிபர் முகமது மூயிஸ் வலியுறுத்தியுள்ளார்.
முதன்மை சந்தையாக சீனா
மாலைதீவு அதிபர் முகமது மூயிஸ் 5 நாள்கள் பயணமாக சீனாவுக்குச் சென்றுள்ளார். இரண்டாவது நாளான (ஜன. 9) தென்கிழக்கு சீனாவின் ஃபுஜியான் பகுதியில் பேசிய அவர்,
மாலைதீவுடன் நெருங்கிய உறவு கொண்டது சீனா. பரஸ்பர மேம்பாட்டில் மாலைதீவின் சிறந்த நட்பு நாடாகவும் சீனா விளங்குகிறது. கொரோனாவுக்கு முன்புவரை எங்களின் முதன்மை சந்தையாக சீனா இருந்தது.
இதனை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் சீனா அதிக அளவிலான சுற்றுலா பயணிகளை மாலைதீவுக்கு அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மாலைதீவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ரஷ்யா இரண்டாவது இடத்திலும், சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ibctamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments