
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு மாலத்தீவு.. பல்வேறு தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய மாலத்தீவு நாடு சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக விளங்கியது. மாலத்தீவில் மொத்த மக்கள் தொகையே 5.21 லட்சம் தான். புவிசார் அரசியலில் இந்தியாவுக்கு முக்கிய நாடாக இருக்கிறது. இந்தியாவுக்கு நெருக்கமான நாடாக இருந்த மாலத்தீவு, கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆட்சி மாற்றத்திற்கு பிறகு நிலமை அப்படியே மாறிப்போனது.
சீனாவுடன் அதிகம் நெருக்க காட்ட ஆரம்பித்தார் புதிதாக பதவியேற்ற அதிபர் முகம்மது முய்சு.. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் விமர்சித்தத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடிக்கு எதிராக இழிவான கருத்துக்களை கூறியது விமர்சனத்திற்கு உள்ளானது. மாலத்தீவு அமைச்சர்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியர்கள் பலரும் அந்த நாட்டிற்கு செல்ல இருந்த பயணத்தை ரத்து செய்தனர்.
சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியிருக்கும் மாலத்தீவு இதனால், அதிர்ந்து போனது. இந்தியாவும் மாலத்தீவு தூதருக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டது. மாலத்தீவு எதிர்க்கட்சிகளும் கடுமையான நெருக்கடியை அரசுக்கு கொடுத்ததன. இதனால், வேறு வழியின்றி பணிந்து போன மாலத்தீவு அரசு, சம்ந்தபட்ட அமைச்சர்களை நீக்கியதோடு, அது அவர்களின் தனிப்பட்ட கருத்தும் என்றும் விளக்கம் அளித்தது. இந்த சர்ச்சைகளுக்கு இடையே சீனாவுக்கும் மாலத்தீவு அதிபர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
தங்கள் நாட்டிற்கு அதிக சுற்றுலாப்பயணிகள் வருவதை சீனா ஊக்குவிக்க வேண்டும் என்று அந்த நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங்கிடம் மாலத்தீவு அதிபர் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக முய்சு கூறுகையில், " கொரோனாவுக்கு முன்பாக சீனாதான் எங்கள் சுற்றுலாத்துறையில் அதிக பங்களிப்பை அளித்தது. எனவே அதே நிலையை திரும்ப கொண்டு வர தீவிர முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்" என்று கூறியிருந்தார்.
சீனாவிற்கு ஐந்து நாள் பயணமாக சென்ற மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து மாலத்தீவு திரும்பினார். அதன்பிறகு மாலத்தீவு அதிபர் வெளியிட்ட அறிக்கையில், நாங்கள் அளவில் சிறிய நாடாக இருக்கலாம். அதற்காக எந்த ஒரு நாட்டிற்கும் எங்களை கொடுமைப்படுத்தும் உரிமை கிடையாது என்று கூறியுள்ளார். பிரதமர் மோடி குறித்த விமர்சனத்தால் இந்தியா - மாலத்தீவு இடையேயான உறவில் சலசலப்பு ஏற்பட்டு இருக்கும் நிலையில், மாலத்தீவு அதிபரின் இந்த பேச்சு பெரும் கவனம் பெற்றுள்ளது.
oneindia
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments