
ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் அவரின் பதவிக்காலம் முடியவுள்ளதால் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் அதிபர் டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக வேட்பாளரை இறுதி செய்யும் உட்கட்சி தேர்தலை அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் குடியரசுக் கட்சி நடத்தி வருகிறது. அயோவா மாகாணத்தில் நடந்த தேர்தலில் டிரம்புக்கு 51.1% வாக்குகள் கிடைத்தன. புளோரிடா மாகாண ஆளுநர் ரான் டேசாண்டிஸ் 20.7% வாக்குகளுடன் 2ஆம் இடத்தில் இருக்கிறார். நிக்கி ஹேலிக்கு 19% வாக்குகளும், விவேக் ராமசாமிக்கு 7. 7 % வாக்குகளும் கிடைத்தன.
இந்தப் பின்னடைவினைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். மேலும், டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 38 வயதாகும் விவேக் ராமசாமி தற்போது தொழில்முனைவாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அயோவா மாகாண தேர்தல் வெற்றியை தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய டொனால்ட் டிரம்ப், அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான அதிபர் ஜோ பைடன் என்று விமர்சித்தார். தான் அதிபராக இருந்திருந்தால் இஸ்ரேல் மீது ஹமாஸ் போர் தொடுத்திருக்க முடியாது என்றும் கூறினார். மேலும், தான் மீண்டும் அதிபரானால், இஸ்ரேல், ரஷ்யா பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன் என்றும் டிரம்ப் உறுதிபடத் தெரிவித்தார்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments