Ticker

6/recent/ticker-posts

இட்லி மாவில் சுவையான தேன் மிட்டாய் எப்படி செய்வது?

வீட்டில் இருக்கும் குழந்தைகளோ அல்லது பெரியவர்களோ அடிக்கடி ஸ்வீட்ஸ் வேண்டும் என்பது கேட்பதுண்டு. அப்போது என்ன செய்வது என்று நினைக்காமல் சுலபமான மற்றும் சுவையான தேன் மிட்டாயை செய்து அசத்துங்கள்.

வீட்டில் இருப்பவர்களுக்கு ஸ்வீட்டாக இருக்கும் ஏதேனும் ஒன்றுதான். இதற்கு பெரிதாக எந்த பொருளும் தேவைப்படாது என்பதால் இதை செய்வது சுலபம். இட்லி மாவை வைத்து சுவையான தேன் மிட்டாய் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
சர்க்கரை - 1 கப்
தண்ணீர்
இட்லி மாவு - 1 கப்
Orange color பவுடர் - 1/4 ஸ்பூன் 
சமையல் சோடா - 1/4 ஸ்பூன்
எண்ணெய்

செய்முறை
சர்க்கரை மற்றும் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு கிளறி, அது நன்கு பதம் வரும்வரை காத்திருக்கவும்

புளிக்காத இட்லிமாவில் உப்பு, Orange color பவுடர் மற்றும் சமையல் சோடாவை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.   

பின்னர் இதை சின்ன உருண்டையாக்கி எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்க வேண்டும்.

பொறித்த இந்த உருண்டையை அந்த சர்க்கரை தண்ணீரில் போட்டு 2 மணி நேர அளவிற்கு ஊற வைத்து எடுத்தால் சுவையான இனிப்பு மிகுந்த இட்லி மாவில் செய்யப்பட தேன் மிட்டாய் தயார்.

manithan


 



Post a Comment

0 Comments