
பொங்குக பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
கால மாற்றத்தைக்
கருத்தினில் கொண்டு
இயற்கையோடு இயைந்து
இன்பம் தழைக்க!
பேரிடர் காலமாய்
பெருந்தொற்றே வந்தாலும்
பெரும் வெள்ளமே
பேரிடராய் வந்தாலும்
அடுக்கியே இடுக்கண்
அலையென வந்தாலும்
இன்பமும் இன்னலும்
இயல்பே என்றாலும்
பேராற்றல் கொண்டு
பெருந்துயரை எதிர்கொண்டு
திண்ணிய நெஞ்சொடு
தீதில்லா வாழ்வுபெற
பழந்தமிழர் பண்பாம்
பகிர்தல் அறத்தை
பகுத்துண்டு வாழும்
பாங்கான முறையை
வகுத்துக் கொடுத்த
வள்ளுவன் வழியில்
வள்ளுவம் விதைத்து
வாழ்வோம் வளமுடன்!
பொங்குக பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
கோ. இமயவரம்பன்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments